தொட்டில் குழந்தை" திட்டத்தை விமர்சிப்பதா?: வளர்மதி கோபம்
சென்னை:
பெண் சிசுக் கொலையைத் தடுப்பதற்காக, காலம் சென்ற அன்னை தெரசாவின் ஆசியுடன்தொடங்கப்பட்ட "தொட்டில் குழந்தை" திட்டத்தை சில எதிர்க் கட்சிகள் சில எதிர்க் கட்சிகள்விமர்சித்துப் பேசி வருவதாக சமூகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் வளர்மதி கூறினார்.
சட்டசபையில் இன்று அவர் பேசுகையில்,
பெண் சிசுக் கொலையை முற்றிலுமாக ஒழித்துக் கட்டுவதற்காகவே முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் கடந்த 1992ம் ஆண்டு "தொட்டில் குழந்தை" திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அன்னை தெரசாவின் முழு ஆசியுடன் இந்தத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இதுவரை சுமார் 745 குழந்தைகள் அரசுத்தொட்டிலில் போடப்பட்டுள்ளன. இவற்றில் 700 பெண் குழந்தைகளும் அடக்கம்.
இந்தத் திட்டத்தின் மூலம் மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் பெண்சிசுக்கள் கொலை செய்யப்படுவது கிட்டத்தட்ட நின்று போய் விட்டது என்றே கூறலாம்.
மேலும் அரசுத் தொட்டிலில் குழந்தைகளைப் போட்ட சில பெற்றோர்கள் அடுத்த சில நாட்களிலேயேமனம் மாறித் திரும்பி வந்து தங்கள் குழந்தைகளை மீட்டுச் சென்றுள்ளனர். இதுபோல் 28குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மற்ற குழந்தைகளும் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள காப்பகங்களில் சிறப்பான முறையில் வளர்ந்துகொண்டிருக்கின்றன. குழந்தைப் பேறு இன்றி தவித்துக் கொண்டிருக்கும் பெற்றோரிடமும் சிலகுழந்தைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஆனால் இந்தத் திட்டத்தை சில எதிர்க் கட்சியினர் விமர்சித்துப் பேசி வருவதுதான் வருத்தமாகஉள்ளது.
இதேபோல் கடந்த 1982ம் ஆண்டு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். காலத்தில் கொண்டுவரப்பட்டசத்துணவுத் திட்டத்தின் மூலம் தற்போது சுமார் 65 லட்சம் குழந்தைகள் பலனடைந்து வருகின்றனர்.
இந்தத் திட்டத்திற்காக இந்த ஆண்டுக்கு ரூ.645.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தச்செலவை மத்திய அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கோரி சமீபத்தில் பிரதமர் வாஜ்பாய்க்குஜெயலலிதா கடிதம் எழுதி இருந்தார்.
ஆனால் சத்துணவுக் கூடங்களில் பணியாற்றும் அங்கன்வாடிகளுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்காகரூ.27.33 கோடி மட்டுமே மத்திய அரசிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் என வாஜ்பாயிடமிருந்துபதில் கடிதம் வந்தது என்றார் வளர்மதி.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications