மாறன் விரைவில் குணமடைய ராஜ்ய சபா எம்.பிக்கள் வாழ்த்து
டெல்லி:
அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் விரைவில் குணமடையராஜ்யசபா எம்.பிக்கள் சார்பில் வாழ்த்துவதாக அதன் தலைவரும் துணை ஜனாதிபதியுமானபைரோன் சிங் ஷெகாவத் கூறினார்.
மாறனுடைய செயற்கை இருதய வால்வில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பூஞ்சைத் தொற்றுஏற்பட்டதைத் தொடர்ந்து அவருடைய உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்குசென்னை-அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் அங்கு அவருடைய உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்து வந்தது.நுரையீரல், சிறுநீரகம் போன்றவை கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதையடுத்து சிங்கப்பூரிலிருந்துவரவழைக்கப்பட்ட சிறப்பு ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் மாறன் அமெரிக்காவுக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
ஹூஸ்டன் நகரில் உள்ள புகழ்பெற்ற மெதடிஸ்ட் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக மாறன்சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய முழுமருத்துவச் செலவையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் மாறன் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என இன்று ராஜ்யசபாவில் வாழ்த்துதெரிவிக்கப்பட்டது. "கடந்த சில மாதங்களாக மாறன் உடல் நலம் இல்லாமல் உள்ளார். அமெரிக்கமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்" என்றுஷெகாவத் தெரிவித்தார்.
இருதய அறுவைச் சிகிச்சைக்கான புதிய "டா வின்சி" ஆபரேஷன் முறையை நாட்டில் உள்ளமுக்கியமான மருத்துவமனைகளில் அறிமுகப்படுத்த வேண்டும் என தெலுங்கு தேச எம்.பியான ராமமோகன ராவ் கேட்டுக் கொண்டார்.
அப்போது பதிலளித்துப் பேசுகையில்தான் மாறன் விரைவில் குணமடைய வேண்டும் என்றுராஜ்யசபா துணைத் தலைவரான நஜ்மா ஹெப்துல்லா வாழ்த்தினார். இதைத் தொடர்ந்து துணைஜனாதிபதியும் வாழ்த்துத் தெரிவித்தார்.
மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை அமைச்சரான திமுகவைச் சேர்ந்த டி.ஆர். பாலுஅவர்களுக்க நன்றி தெரிவித்துக் கொண்டார். திமுக தலைவர் கருணாநிதி மற்றும் மாறன்குடும்பத்தினர் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக பாலு கூறினார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications