மருத்துவ மாணவர்களுடன் பேச்சு நடத்தத் தயார்: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை:
மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகளின் போராட்டம் 3வது நாளை எட்டியுள்ள நிலையில்,போராட்டத்தைக் கைவிட்டு வந்தால்தான் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றுதமிழக அரசு கூறியுள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது, 79 படிப்புகளுக்கு அகிலஇந்திய மருத்தவக் கவுன்சிலின் அங்கீகாரம் வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று 3வது நாளாக அவர்கள் வகுப்புக்களைப் புறக்கணித்துள்ளனர். ஹவுஸ் சர்ஜன் எனப்படும்5ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அரசுமருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் அரசு மருத்துவமனைக்கு வரும் வெளி நோயாளிகளுக்கு தங்கள் மருத்துவக் கல்லூரிவளாகத்தில் வைத்தே சிகிச்சை அளிக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவ, மாணவிகள்அறிவித்துள்ளனர்.
"பேச்சு நடத்த தயார்":
இந்நிலையில் மாணவ, மாணவிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு வந்தால் மட்டுமேஅவர்களுடைய கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று தமிழக அரசுஅறிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் ஒழுங்குபிரச்சனையை எழுப்பினார். கடந்த 3 நாட்களாக மருத்துவ மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம்தொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று அவர் கேட்டார்.
பாமக தலைவர் ஜி.கே. மணி, சிவ புண்ணியம், பாலபாரதி, சந்தானம், ஹேமச்சந்திரன் மற்றும்நன்மாறன் ஆகிய எம்.எல்.ஏக்களும் இது தொடர்பாகக் கேள்விகளை எழுப்பினார்கள்.
அவர்களுடைய கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய நலத் துறை அமைச்சர் செம்மலை, அரசிடம்எந்தவிதமான முன் அறிவிப்பும் இல்லாமல் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள்போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
அவர்கள் என்னை இதற்கு முன் சந்தித்தபோதே நான் விரிவான விளக்கத்தை அளித்துள்ளேன்.அதையும் மீறி தற்போது எந்தவிதமான முன் அறிவிப்பும் இன்றி வகுப்புக்களைப் புறக்கணித்துபோராட்டத்தில் குதித்துள்ளனர்.
அவர்களுடைய விருப்பத்திற்கு மாறான எந்தவிதமான நடவடிக்கைகளிலும் அரசு ஈடுபடாது.எனவே அவர்கள் போராட்டத்தை உடனடியாகக் கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்த முன்வரவேண்டும்.
இதுவரை அவர்களைப் பாதிக்கும் வகையில் எந்தவிதமான முடிவையும் அரசு எடுக்கவில்லை.போராட்டத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன் வந்தால் அவர்களுடைய கோரிக்கைகளைப்பரிசீலித்து நல்ல முடிவு எடுக்கப்படும்.
ஞானசேகரனின் மகன் கூட ஹவுஸ் சர்ஜனாகத்தான் உள்ளார். அந்த வகையில் பெற்றோர் என்றமுறையில் அவர் தன் பிள்ளைக்கு அறிவுரை கூறி போராட்டத்தைக் கைவிடச் செய்ய வேண்டும்என்றார் செம்மலை.
உண்ணாவிரதம்:
இந்நிலையில் மருத்துவ, பல் மருத்தவக் கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று உண்ணாவிரதப்போராட்டத்திலும் குதித்துள்ளனர்.
கல்லூரி வளாகங்களிலேயே அவர்கள் உட்கார்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இதற்கிடையே திருச்சியில் மருத்தவக் கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று கையெழுத்துஇயக்கத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் போராட்டத்திற்கு ஆதரவு கோரி பல்வேறு தரப்பினரிடம்அவர்கள் கையெழுத்து வேட்டையாடி வருகின்றனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications