ரகசிய இடத்துக்கு கொண்டு செல்லப்பட்ட வரதராஜ பெருமாள்
ஆஜ்மீர்:
இந்திய அமைதி காப்புப் படையினரால் இலங்கை தமிழர் பகுதியின் முதல்வராக நியமிக்கப்பட்டு, பின்னர்விடுதலைப் புலிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக ஆஜ்மீரில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த வரதராஜபெருமாள் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக அவர் ஆஜ்மீரில் இந்திய வெளிநாட்டு உளவு அமைப்பான ரா பாதுகாப்பில்வைக்கப்பட்டிருந்தார்.
அவரது பாதுகாப்பு மற்றும் செலவுகளை இந்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இப்போது அவர் ஆஜ்மீரில்இருந்து வேறிடத்துக்கு ரகசியமாக மாற்றப்பட்டுள்ளார். இப்போது அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்றுதெரியவில்லை.
கடந்த வாரத்தில் அவர் ஆஜ்மீரில் இருந்து இடம் மாற்றப்பட்டதாக மத்திய உளவுப் பிரிவு வட்டாரங்கள்தெரிவிக்கின்றன. எதற்காக இந்த திடீர் இடமாற்றம் என்று தெரியவில்லை.
புலிகளை அடக்குவதற்காக ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பைச் சேர்ந்த இவரை இந்தியா முதல்வராக்கியது. ஆனால்,இந்திய அமைதி காப்புப் படை 1990ம் ஆண்டு வாபஸ் பெறப்பட்டதையடுத்து வரதராஜ பெருமாள் தனது மனைவிகெளரி, 3 மகள்கள், மைத்துனியுடன் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டார்.
1999ம் ஆண்டில் மட்டும் இலங்கை சென்றுவிட்டுத் திரும்பினார் பெருமாள்.
அமைதி பேச்சை கைவிட மாட்டோம்: புலிகள்
இதற்கிடையே, அமைதிப் பேச்சுக்களில் இருந்து நிரந்தரமாக விலகவில்லை என விடுதலைப் புலிகள் இயக்கம்விளக்கம் தந்துள்ளது.
அடுத்த சுற்று தாய்லாந்து பேச்சுவார்த்தையையும், ஜப்பான் நிதியாளர் மாநாட்டையும் தான் புறக்கணிக்கிறோமேதவிர நிரந்தரமாய் பேச்சில் இருந்து விலகுவதோ, மீண்டும் போரை ஆரம்பிப்பதோ எங்கள் எண்ணிமில்லை எனபுலிகள் கூறியுள்ளனர்.
இந்தியா தலையிட கோரிக்கை:
இந் நிலையில், இலங்கை அமைதிப் பேச்சுவார்தைகளை இந்தியா கண்காணிக்க வேண்டும் என அதிபர் சந்திரிகாகுமாரதுங்காவின் மக்கள் கூட்டணிக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளதுய
குமாரதுங்காவின் வெளியுறவுத்துறை ஆலோசகர் லட்சுமண் கதிர்காமர் இதனைத் தெரிவித்தார். அவர் கூறுகையில்,இலங்கை கடற்படையுடன் மோதி வரும் கடற்புலிகளைக் கண்காணிக்க இந்தியா தனது பார்வையாளர்களைஅனுப்ப வேண்டும்.
இது குறித்து இந்தியாவுடனும் பேசியுள்ளோம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications