பைலட்டுகள் திடீர் ஸ்டிரைக்: 5 ஏர்-இந்தியா விமானங்கள் ரத்து
மும்பை:
சார்ஸ் பாதித்த நாடுகளுக்கு விமானங்களை இயக்க மறுத்து வரும் ஏர்-இந்தியா நிறுவனபைலட்டுக்கள் இப்போது புதிய நிபந்தனையையும் விதித்துள்ளனர். தங்களுடன் விமானத்தில் வரும்விமான சிப்பந்திகளும் சார்ஸ் பாதித்த நாடுகளுக்குச் செல்லாதவர்களாக இருக்க வேண்டும் எனஅவர்கள் கூறியுள்ளனர்.
தங்களுடன் வரும் ஏர்-ஹோஸ்டஸ், பர்ஸர் உள்ளிட்ட விமான ஊழியர்கள் சார்ஸ் நோயால்பாதிக்கப்பட்ட ஹாங்காங், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு செல்லவில்லை என்பதை உறுதிசெய்யும் சான்றிதழோடு தான் விமானத்தில் ஏற வேண்டும் என்று ஏர் இந்தியா விமான பைலட்டுகள்கோரிக்கை வைத்தனர்.
ஆனால், அவர்களுடைய கோரிக்கையை ஏர் இந்தியா நிறுவனம் நிராகரித்து விட்டது. சான்றிதழ்கள்வழங்கப்படும் வரை தாங்கள் விமானத்தை இயக்கப் போவதில்லை என்று கூறி பைலட்டுகள்வேலை நிறுத்தப் போராட்டத்தில் குறித்துள்ளனர்.
இதனால் இன்று மும்பையிலிருந்து செல்லவிருந்த 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அவற்றின் விவரம்: மும்பை- துபாய் (ஏ.ஐ.713), மும்பை-டெல்லி-லண்டன் (ஏ.ஐ.129), மும்பை-டெல்லி-ஹாங்காங் (ஏ.ஐ.310), மும்பை- சென்னை-சிங்கப்பூர் (ஏ.ஐ.472) மற்றும் மும்பை- குவைத்(ஏ.ஐ.859) ஆகியவை.
மேலும் சில விமானங்கள் தாமதமாகக் கிளம்பும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பைலட்டுகள்எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷானவாஸ் ஹூசேன் புகார் கூறியுள்ளார்.
விமானப் போக்குவரத்துத் துறை செயலாளர் ராய் பால் நாளை பைலட்டுகளுடன் பேச்சுநடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சார்ஸ் நோய் கடுமையாகத் தாக்கியுள்ள ஹாங்காங், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குச் செல்லமாட்டோம் என்று பைலட்டுகள் ஏற்கனவே அறிவித்துவிட்டதால் இந்த நாடுகளுக்கான ஏர்-இந்தியாவிமானங்கள் முன்பே ரத்து செய்யப்பட்டுவிட்டன.
பூ ஏற்றுமதி நிறுத்திவைப்பு:
இதற்கிடையே சார்ஸ் நோய் பீதி காரணமாக சிங்கப்பூருக்கு பூ ஏற்றுமதி செய்யப்படுவதுநிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க அரசுக்குச் சொந்தமான ஒரு நிறுவனம் சிங்கப்பூருக்கு டியூப் ரோஸ், க்ளாடியோலஸ்உள்ளிட்ட மலர்களை ஏற்றுமதி செய்து வந்தது.
இந்நிலையில் சிங்கப்பூரில் இதுவரை 14 பேர் சார்ஸ் நோய்க்கு பலியாகிவிட்டதைத் தொடர்ந்துஅந்நாட்டுக்கு மலர்கள் ஏற்றுமதி செய்வதை அந்நிறுவனம் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications