கோவில் திருவிழாவில் ஆபாச நடனம் ஆடிய 5 பெண்கள் கைது
சேலம்:
சேலம் அருகே கோவில் திருவிழாவில் ஆபாச நடனம் ஆடிய 5 பெண்கள் உள்பட 10 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலில் சமீபத்தில் திருவிழாநடைபெற்றது. இந்தத் திருவிழாவையொட்டி நாட்டிய, நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
நடப்பது கோவில் திருவிழா என்பதையே மறந்து இந்நிகழ்ச்சியில் நடனமாடிய பெண்கள் மிகவும்ஆபாசமாக நடனமாடினர்.
இந்த நடனத்தை ஏராளமான இளசுகள் "ஜொள்ளு" விட்டு ரசித்தாலும், பெண்கள் அதைக் காணச்சகிக்காமல் கண்களை மூடிக் கொண்டு இடத்தைக் காலி செய்தனர். சிலர் இது தொடர்பாகப்போலீசாரிடம் புகார் செய்தனர்.
இதையடுத்து ஆபாசமாக நடனம் ஆடிய 5 பெண்களையும் இந்த நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கைதானவர்களை 15 நாள் காவலில் வைக்க மேட்டூர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதர் உத்தரவிட்டார்.
சினிமா படங்கள், பாடல்களுக்கு தடை:
இதற்கிடையே கோவில் திருவிழாக்களில் சினிமா பாடல்களை ஒலிபரப்பரவும், சினிமா படங்களைத்திரையிடவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, "திருவிழா காலங்களில் கோவில்களில் சினிமாபாடல்கள் மற்றும் திரைப்படங்கள் போடப்படுவதால் மக்களிடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது.சில சமயம் இது மிகவும் விபரீதமாகவும் போய் விடுகிறது. இதனால் சட்டம் ஒழுங்கு சீரடைகிறது.இதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?" என்று பாஜக உறுப்பினர் எச். ராஜா கேட்டார்.
அதற்குப் பதிலளித்த இந்து அறநிலையத் துறை அமைச்சர் ராமசாமி, திருவிழா காலங்களில்கோவில்களில் சினிமா பாடல்கள் ஒலிபரப்புவது மற்றும் சினிமாப் படங்கள் திரையிடப்படுவதுஆகியவற்றுக்கு உடனடியாகத் தடை விதிக்கப்படுகிறது.
அதையும் மீறி திரையிடப்படும் கோவில்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் 9,752 கோவில்களில் நன்கொடை மற்றும் அரசு மானியத்தின் மூலம் ஒருகால பூஜைநடைபெறுகிறது.
மீதம் உள்ள கோவில்களிலும் படிப்படியாக ஒருகால பூஜை நடத்த முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார் ராமசாமி.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications