விசைத்தறிகள் வேலை நிறுத்தம் வாபஸ்
கோயம்புத்தூர்:
கலால் வரி உயர்த்தப்பட்டதைக் கண்டித்து கடந்த 25 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தவிசைத்தறி உரிமையாளர்கள் தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளனர்.
கலால் வரி உயர்த்தப்பட்டதைக் கண்டித்தும் மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்பட்டதை எதிர்த்தும்விசைத் தறி உரிமையாளர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இதைத் தொடர்ந்து லட்சக்கணக்கான் விசைத்தறி நெசவாளர்கள் வேலையின்றி கடுமையாகப்பாதிக்கப்பட்டனர். பல விசைத்தறி நெசவாளர்களின் குடும்பத்தினர் சாப்பிடுவதற்குக் கூட உணவுகிடைக்காமல் திண்டாடினர்.
இதையடுத்து கடந்த வாரம் ஈரோட்டில் ஏழை விசைத்தறி நெசவாளர்களுக்காக இலவச கஞ்சித்தொட்டி திறக்கப்பட்டது.
மேலும் இந்தப் போராட்டம் காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பஞ்சாலைகளும்முடங்கிப் போயின. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டமும் ஏற்பட்டது.
இந்நிலையில் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் தங்களுடைய வேலைநிறுத்தப்போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக நேற்று மாலை அறிவித்தனர்.
தங்கள் கோரிக்கைகளைப் பிரதமர் வாஜ்பாய் ஏற்றுக் கொண்டுள்ளதால் வேலைநிறுத்தத்தைக்கைவிடுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து சுமார் 25 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த லட்சக்கணக்கான விசைத்தறிகள் இன்று காலைஇயங்கத் தொடங்கின.
இதனால் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த விசைத்தறிநெசவாளர்கள் நிம்மதி அடைந்து, மகிழ்ச்சியுடன் வேலைக்குச் சென்றுள்ளனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications