ஷார்ஜா-திருச்சி விமானத்தில் கிடந்த வைரங்கள்!
திருச்சி:
ஷார்ஜாவிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் விட்டுச் செல்லப்பட்ட கோடிக்கணக்கான மதிப்புள்ளவைரங்களை சுங்க இலாகாவின் புலனாய்வுத் துறையினர் கைப்பற்றினர்.
மேலும் இந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட செல்போன்கள், வீடியோ காமிராக்கள்ஆகியவற்றையும் புலனாய்வுத் துறையினர் கைப்பற்றினர்.
ஷார்ஜாவிலிருந்து இன்று அதிகாலை திருச்சிக்கு அந்த விமானம் வந்தது. அதில் சிலர் மிக விலைஉயர்ந்த பொருள்களைக் கடத்திக் கொண்டு வருவதாகப் புலனாய்வுத் துறையினருக்குத் தகவல்கிடைத்தது.
இதையடுத்து வழக்கமான சுங்க இலாகா அதிகாரிகளுக்குப் பதிலாக சிறப்புப் படையினர் அந்தவிமானத்திலிருந்த அனைத்துப் பயணிகளையும் தீவிர சோதனையிட்டனர். அப்போது 3 பேரின்பெட்டிகளில் 755 செல்போன்கள், 2 விலை உயர்ந்த சினிமா காமிராக்கள் இருந்தன.
இதைத் தொடர்ந்து அந்த 3 பயணிகளையும் தனியே வைத்து அதிகாரிகள் விசாரித்தனர்.விமானத்தையும் சோதனையிட்டனர். அப்போது சிலர் தங்களது பெட்டிகளை விமானத்திலேயேவிட்டு விட்டுச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அந்தப் பெட்டிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அவற்றிலிருந்து296 செல்போன்கள் மற்றும் 120 சிறு பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த அமெரிக்க வைரங்கள்ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
இதையடுத்து செல்போன்கள், மூவி காமிராக்கள் மற்றும் அமெரிக்க வைரங்கள் ஆகியவற்றைபுலனாய்வுத் துறை அதிகாரிகள் கைப்பற்றினர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.1.2 கோடி என்றுதெரிய வந்துள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் இவ்வளவு மதிப்புள்ள கடத்தல் பொருட்கள் பிடிபட்டுள்ளது இதுவேமுதல் முறை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் சிறப்புப் படையினர் சோதனையிடுவதை எப்படியோ அறிந்த கொண்ட கும்பல் வைரத்தைஅப்படியே விமானத்தில் போட்டுவிட்டுத் தப்பியுள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications