இலங்கையில் தமிழக மீனவர்கள் விடுதலை: ஆனால் ஊர் திரும்புவதில் சிக்கல்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட 26 மீனவர்கள் ராமேஸ்வரம் திரும்புவதில் தாமதம்ஏற்பட்டுள்ளதால் அவர்களுடைய குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.

கடந்த மாதத் துவக்கத்தில் ராமேஸ்வரம், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 120மேற்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. இவர்களில் பல மீனவர்களைஇலங்கை மீனவர்களே கடத்திச் சென்று விட்டனர்.

இதையடுத்து மத்திய அரசும், தமிழக அரசும் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக சுமார் 90மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் ராமேஸ்வரம் வந்து சேர்ந்து விட்டனர்.

ஆனால் எஞ்சிய 27 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையிலேயே தொடர்ந்து வாடிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் சமீபத்தில் தப்பி ஓடிவிட்டார். மீதமுள்ள 26 மீனவர்களையும்விடுவிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்து 2 நாட்களுக்கு முன் மன்னார் நீதிபதி, 27 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்துஉத்தரவிட்டார்.

இதையடுத்து தப்பி ஓடிய மீனவரைத் தவிர மற்ற 26 மீனவர்களும் இன்று காலை ராமேஸ்வரத்திற்குவந்து சேருவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் அவர்களுடைய குடும்பத்தினரும்உறவினர்களும் ராமேஸ்வரம் கடற்கரையில் ஆவலோடு காத்திருந்தனர்.

மீனவர்களை அழைத்துக் கொண்டு வர இந்தியக் கடலோரக் காவல் படையின் கப்பலும் கிளம்பத்தயாராக இருந்தது. ஆனால் மன்னாரிலிருந்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர்எப்போது கொண்டு வருவார்கள் என்பது குறித்த தகவல் வந்து சேரவில்லை.

இதனால் ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்குள் கப்பல் செல்லவில்லை. இதையடுத்து அந்த 26மீனவர்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் கவலை அடைந்துள்ளனர். மீனவர்கள் எப்போதுதிரும்புவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+