மதுரை சிறை வார்டன் கொலை வழக்கு: 4 அல்-உம்மாவினருக்கு ஆயுள் தண்டனை
மதுரை:
மதுரை மத்திய சிறைச்சாலையின் துணை வார்டன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தடை செய்யப்பட்டஅல்-உம்மா அமைப்பைச் சேர்ந்த 4 பேருக்கு விரைவு நீதிமன்றம் ஆயுள் தணடனை வழங்கியுள்ளது.
1997ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி இந்தக் கொலை நடந்தது. சிறைச்சாலை வளாகத்திலேயே உள்ளது தனதுவீட்டில் இருந்து வார்டன் ஜெயப்பிரகாஷ் சிறைக்கு வந்தார். அப்போது சிறை வாசலில் வைத்தே அவரை 5 பேர்வெட்டிக் கொன்றனர்.
இந்தக் கொலை தமிழகத்தையே பெரும் பரபரப்புக்குள்ளாக்கியது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 பேர்மீது வழக்குப் பதிவு செய்தனர். கோயம்புத்தூரைச் சேர்ந்த அபுதாகிர், தடா ஆசிக், அஸ்லம், ஜாபீர் ஆகிய 4பேரைக் கைது செய்தனர்.
ஆனால், மதுரையைச் சேர்ந்த டெய்லர் ராஜா என்பவர் தப்பிவிட்டார். இன்னும் அவர் தலைமறைவாகவேஉள்ளார்.
இந்த வழக்கு விசாரணை மதுரை 2வது தனி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.இதற்காக கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 4 குற்றவாளிகளும் பலத்த பாதுகாப்புடன் மதுரைக்குக்கொண்டு வரப்பட்டனர்.
தீர்ப்பு வழங்கிய நீதிபதி வெங்கடசாமி, இந்த நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ரூ. 3,500 அபராதமும்விதித்தார்.
அப்போது அந்த நால்வரும், எங்களுக்கு இறைவன் தான் நியாயமான தண்டனை தர முடியும் என குரல்எழுப்பினர். நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. எங்களை அழிக்க நினைப்பவர்களுக்கு மட்டுமேஎதிரிகள் என்று குரல் எழுப்பினர். உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்து அடக்கினர்.
ஆனால், போலீசாரையும் திமிரிக் கொண்டு குரல் எழுப்பிய அவர்கள், எந்தத் தவறும் செய்யாத 300அல்-உம்மாவினரை எதற்காக சிறையில் வைத்துள்ளது இந்த போலீஸ் என்று கேட்டனர். இதனால் நீதிமன்றத்தில்பரபரப்பு ஏற்பட்டது.
இந்தத் தீர்ப்பு வழங்கப்படுவதையடுத்து மதுரை நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புப்போடப்பட்டிருந்தது. தீர்ப்புக்குப் பின் அவர்கள் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் கோவை சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications