ஊட்டி, கொடைக்கானலில் மலர்க் கண்காட்சி

Subscribe to Oneindia Tamil

ஊட்டி & கொடைக்கானல்:

புகழ் பெற்ற ஊட்டி மலர்க் கண்காட்சி வரும் 17ம் தேதி தொடங்குகிறது.

ஊட்டியில் தற்போது சீசன் களை கட்டியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்துகுவிந்துள்ளனர். சீசனின் முக்கிய அம்சங்களில் ஒன்றான மலர்க் கண்காட்சி 17ம் தேதிதொடங்குகிறது.

நீலகிரி மாவட்ட கலெக்டர் செல்லமுத்து இது குறித்து தெரிவிக்கையில், 17 மற்றும் 18 ஆகிய இருநாட்களிலும் மலர்க் கண்காட்சி நடைபெறும்.

இதைத் தொடர்ந்து 25ம் தேதி கனிகளின் கண்காட்சி நடைபெறும். இதில் பல்வேறு வகையானகனிகள் பார்வைக்கு வைக்கப்படும்.

கடந்த 2000ம் ஆண்டு மொத்தம் 15.5 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். 2002ல் இது20.32 லட்சமாக உயர்ந்தது. 18,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும்ஊட்டிக்கு வந்திருந்தனர் என்றார் செல்லத்துரை.

முன்னதாக சுற்றுலா நாள் விழாவை கலெக்டர் துவக்கி வைத்தார்.

கொடைக்கானலில்...

அதேபோல் கொடைக்கானலில் வரும் 24ம் தேதி மலர்க் கண்காட்சி தொடங்கவுள்ளது.

இதற்காக ஏராளமான மலர்கள் அங்கு வளர்க்கப்பட்டு வருகின்றன. சுமார் 270 வகையானரோஜாக்களும் கண்காட்சியில் இடம் பெற உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+