குபேர பூஜை பெயரில் பண மோசடி: 2 போலி சாமிகள் கைது
தேனி:
குபேர பூஜை நடத்துவதாகக் கூறி பெண்களிடம் பணமோசடி செய்த 2 போலி பூசாரிகளை போலீஸார் கைது செய்தனர்.
தேனியைச் சேர்ந்தவர்கள் முருகன், பாண்டி. இருவரும் தங்களை பூசாரிகள் என்று கூறிக் கொண்டும் வறுமை, துயரங்கள் நீங்க குபேர பூஜைசெய்வதாகவும் கூறி வந்தனர்.
இவர்களது பேச்சில் மயங்கிய முனியசாமி என்பவர் தனது வறுமை நீங்க குபேர பூஜை நடத்துமாறு பூசாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.அதைத் தொடர்ந்து ரூ. 5,000 கொடுக்குமாறும், அதை ஒரு பெட்டியில் வைத்து பூஜை செய்தால், ஒரு மாதத்தில் ரூ. 1லட்சம் கிடைக்கும்என்றும் இந்த இருவரும் கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து தல்கட்டமாக ரூ. 700 கொடுத்துள்ளார் முனியசாமி. பின்னர் மீதிப் பணத்தையும் சில நாட்கள் கழித்துக் கொடுத்தார்.அதன் பிறகு அந்த பணத்தை சூட்கேஸில் வைத்து ஏதோ பூஜையும் நடத்தினர் இந்த பூசாரிகள்.
பின்னர் அந்த சூட்கேஸை முனியசாமியிடம் கொடுத்து, 18 நாட்கள் கழித்துத் திறந்து பார்க்குமாறும் அப்போது இதில் ரூ. 1 லட்சம் இருக்கும்கூறியுள்ளனர்.
அவரும் 18 நாட்கள் வரை விரதம் இருந்தார். 18வது நாள் குளித்து முடித்து உடலெங்கும் திருநீரு பூசிக் கொண்டு பெட்டியைத் திறந்துபார்த்தார்.
உள்ளே காற்று தான் இருந்தது. பணம் ஏதும் இல்லை, அப்போது லட்சத்தை நம்பி தனது ரூ. 5,000மும் பறி போனதை உணர்ந்தார். உடனேபோலீஸில் புகார் செய்தார்.
போலீஸார் விசாரணை நடத்தி 2 போலி பூசாரிகளையும் கைது செய்தனர். முனியசாமியை ஏமாற்றியதுபோல தேனி பகுதியில் பலரையும்இவர்கள் ஏமாற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications