""பாமக என்றாலே மரம் வெட்டி கட்சிதான்"": ஜெ. கிண்டல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

"பாமக என்றாலே மரங்களை வெட்டி வீழ்த்திய கட்சிதான் என்ற பெயர் உண்டு. அதை என்ன செய்தாலும் மூடிமறைக்க முடியாது" என தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சட்டசபையில் சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கை தொடர்பாக நடந்த விவாதத்தின்போது அவர் இவ்வாறுகூறினார். அந்த விவாதத்தின் விவரம்:

பாரிமோகன் (பாமக): காடுகள் வெட்டப்பட்டு மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. உலகிற்கு வளம் சேர்க்கும்மரங்களைப் பாதுகாக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

ஜெயலலிதா: இதுபோன்ற பாமக உறுப்பினர் நிறைய கேள்விகளைக் கேட்டுள்ளனர். நான் அவர்களிடம் ஒரே ஒருகேள்வி கேட்கிறேன். வனத் துறை என்பது மரம் வளர்ப்பது தொடர்பானது. ஆனால் முன்பு பாமகவினர்எத்தனையோ மரங்களை வெட்டியுள்ளனர். ஆனால் அவர்களது பசுமைத் தாயக நாயகன் (பாமக நிறுவனர்டாக்டர் ராமதாசின் மகன் அன்புமணி) எத்தனை மரங்களை நட்டிருக்கிறார் என்று கூற முடியுமா?

ஜி.கே. மணி (பாமக): முதல்வர் இப்படிப் பேசுவது விந்தையாக உள்ளது. ஏதோ எங்கள் தலைவரை மரம் வெட்டிபோலச் சித்தரிக்கிறார். இது வேதனையளிக்கிறது. உலகமே வியக்கும் அளவுக்கு இட ஒதுக்கீட்டுக்காக நாங்கள்நடத்திய போராட்டத்தின்போது ஒரு சில மரங்கள் வெட்டப்பட்டிருக்கலாம். அதற்குப் பின்னர் அன்புமணி1,60,000 மரக் கன்றுகளை நட்டு பல பாராட்டு விருதுகளைப் பெற்றுள்ளார்.

சபாநாயகர் காளிமுத்து: பழைய பாவத்துக்குப் பரிகாரமா என்றுதான் முதல்வர் கேட்கிறார்.

நிதி அமைச்சர் பொன்னையன்: வேறு எந்தக் கட்சியும் மரங்களை வெட்டியது கிடையாது. எந்தெந்த கட்சிகள்மரங்களை வெட்டின என்று மணியால் கூற முடியுமா?

(இதையடுத்து மணி அதிமுகவைத் தாக்கிப் பேசினார். அவரது பேச்சு அனைத்தையும் அவைக் குறிப்பிலிருந்துநீக்குவதாக காளிமுத்து அறிவித்துதார். இதனால், அவற்றை வெளியிட இயலாது).

ஜெயலலிதா: நான் கேட்ட கேள்விக்கு நீண்ட நெடிய வியாக்கியானம் அளித்தார் மணி. ஆனால் ஒரு உண்மைஎன்னவென்றால், ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு பெயர் உண்டு. அந்தக் காலத்தில் ஹிந்தி மொழி எதிர்ப்புப்போராட்டத்தில் பங்கேற்ற கட்சி என்ற பெயர் திமுகவுக்கு உண்டு. சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்த கட்சிஎன்ற பெயர் அதிமுகவுக்கு உண்டு. அதுபோலத்தான் மரங்களை வெட்டி வீழ்த்திய கட்சி என்ற பெயர் பாமகவுக்குஉள்ளது. அதை என்னதான் செய்தாலும் உங்களால் மூடி மறைக்க முடியாது.

ஞானசேகரன் (காங்.):சுதந்திரம் பெற்றுத் தந்த கட்சி என்று காங்கிரஸ் கட்சிக்குப் பெயர் உண்டு என்பதை நான்கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

மணி: பாமக என்றால் சமூக நீதிக்காகப் போராடிய கட்சி என்ற பெயர் உள்ளது.

ஜெயலலிதா: 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக சட்டசபையில் தீர்மானம் போட்டது அதிமுக அரசு. அதற்காகத்தான்எனக்கு சமுதாய நீதிக் காவலர் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+