திசை மாறிய புயல்: தமிழகத்துக்கு வந்த மழையும் நின்னு போச்சு!
சென்னை:
கடந்த இரு நாட்களாக தமிழகத்தை அச்சுறுத்தி வந்த புயல் சின்னம் வடக்கு நோக்கி நகரத் துவங்கிவிட்டது.இதனால் தமிழகத்தின் வட பகுதிகள் மற்றும் பாண்டிச்சேரிக்கு புயல் ஆபத்து நீங்கிய நிலையில், மழைபெய்வதற்கான வாய்ப்பும் பறி போய் விட்டது.
இப்போது புயல் ஒரிஸ்ஸாவைத் தாக்கும் என்று தெரிகிறது. முதலில் ஆந்திரக் கடலோரத்தை நோக்கி நகர்ந்த புயல்இப்போது வலுவிழந்து ஒரிஸ்ஸாவை நோக்கி நகர்ந்து வருகிறது.
தமிழகத்திலும் பாண்டிச்சேரியிலும் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. இதனால் வழக்கமாக புயலுக்குபயப்படும் மக்கள் இந்த முறை புயலோடு சேர்ந்து வரும் மழைக்காக ஏங்கிக் கொண்டிருந்தனர். ஆனால், இப்போதுதிசை மாறிப் போய்விட்டது புயல்.
முதலில் புயல் திசை மாறினாலும் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலைஆராய்ச்சி மையம் கூறியிருந்தது. ஆனால், அந்த மழையும் பெய்யவில்லை. லேசான தூரல் மட்டுமே மிஞ்சியது.இப்போது மீண்டும் வெயில் தகிக்க ஆரம்பித்துவிட்டது.
இனி மழை பெய்வதற்கான வாய்ப்பும் இல்லை என வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துவிட்டது.
இந் நிலையில் இப்போது புயல் ஆபத்தை எதிர்கொண்டுள்ள ஆந்திர, ஒரிஸ்ஸா அரசுகள் முன்னெச்சரிக்கை மீட்புநடவடிக்கைகளை மேற்கொண்டன. மேலும் கடற்படையும் ரயில்வே துறையும் புயல் நிவாரணம் மற்றும் மீட்புப்பணிகளுக்காக தங்களைத் தயார் நிலையில் வைத்துள்ளன.
காலை இந்த புயல் சின்னம் தமிழகக் கடலோரத்தில் இருந்து கிழக்கு-தென் கிழக்குப் பகுதியில் வங்கக் கடலில் 550கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது. நேற்று முழுவதும் வெறும் 50 கி.மீ. மட்டுமே இந்தப் புயல்நகர்ந்துள்ளது. இப்போது வடக்கு நோக்கி நகர்ந்து வரும் இந்தப் புயல் ஓரிரு தினங்களில் ஒரிஸ்ஸாஎல்லையிலோ கரையைக் கடக்கலாம் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
பெண் கமாண்டோ விழா தள்ளிவைப்பு:
சென்னையை புயல் தாக்கலாம் என்ற அச்சம் நிலவியதால் இன்று நடப்பதாக இருந்த பெண் கமாண்டோ படைதொடக்க விழா தள்ளி வைக்கப்பட்டது.
இந்தியாவிலேயே முதல் முறையாக பெண்களைக் கொண்ட கமாண்டோ படை தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த படையின் தொடக்க விழா இன்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடப்பதாக இருந்தது. இந் நிலையில்சென்னையில் புயல் அபாயம் நிலவியதால் தொடக்க விழா ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications