மருத்துவ மாணவர்களுடன் இனிமேல் பேச்சே கிடையாது: செம்மலை திட்டவட்டம்
சென்னை:
மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன் தேவையான அளவு பேசியாகி விட்டது. இனிமேல் பேச்சுவார்த்தைக்கேஇடமில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் செம்மலை திட்டவட்டமாக கூறியுள்ளார்.
மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்திருந்த அரசு டாக்டர்கள் தங்களது போராட்டத்தை திடீர் என்று கைவிட்டுள்ளனர்.
இந்த முடிவை இன்று சங்கத் தலைவர் டாக்டர் பிரகாசம் தலைமையிலான டாக்டர்கள் சங்கத்தினர் செம்மலையைப்நேரில் சந்துத்துத் தெரிவித்தனர். அவர்களுக்கு செம்மலை நன்றி தெவித்துக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் செம்மலை பேசுகையில், அரசு மீது நம்பிக்கை வைத்து டாக்டர்கள் தங்களதுபோராட்டத்தை விலக்கிக் கொண்டது மகிழ்ச்சி தருகிறது.
மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆசான்களாக விளங்கும் அரசு டாக்டர்களே போராட்டத்தை வாபஸ்பெற்றுக் கொண்டுள்ள நிலையில், மாணவர்களும் போராட்டத்தை வாபஸ் பெறுவதே நல்லது.
அவர்களுடன் தேவையான அளவுக்கு பேசியாகி விட்டது. அவர்கள் விடுத்த பல்வேறு கோரிக்கைகள்நறைவேற்றப்படும் என்று அரசு உறுதி அளித்துள்ளது. இன்று கூட தஞ்சை மருத்துவக் கல்லூரியில்தொடங்கப்பட்டுள்ள 5 மருத்துவ மேல் படிப்புக்கான அங்கீகாரம் வாங்கப்பட்டுள்ளது.
எனவே, மாணவர்கள் உடனடியாக வகுப்புகளுக்குத் திரும்ப வேண்டும். இனிமேலும் அவர்களுடன் பேச்சு நடத்தஅரசு தயாராக இல்லை என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications