சம்பா சோகம்: விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 1,000 நிவாரணம் தர தமிழக அரசு முடிவு
சென்னை:
காவிரியில் கர்நாடகம் நீர் தர மறுத்ததாலும், மழை பொய்த்தாலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1,000 நஷ்ட ஈடு வழங்க தமிழக அரசு முன் வந்துள்ளது. அடுத்த வாரம் இந்த நிவாரண நிதி வழங்கப்படவுள்ளது.
தமிழகத்தில் சம்பா தவிர குறுவை மற்றும் தாளடி பயிர்களும் பாதிக்கப்பட்டுவிட்டன. ஆனால், சம்பா பயிர்இழப்புக்கு மட்டுமே நிவாரணம் தர தமிழக அரசு முன் வந்துள்ளது.
தமிழகத்தில் ஏற்பட்ட பயிர் பாதிப்புக்கு மத்திய அரசு ரூ. 332 கோடி நிவாரணம் வழங்கியுள்ளது. இதனுடன் மேலும்ரூ. 18 கோடியை சேர்த்து ரூ. 350 கோடியை விவசாயிகளுக்கு நிவாரணமாக வழங்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.
இது குறித்து தமிழக வருவாய்த்துறையினர் கூறியதாவது:
தமிழகத்தில் சென்னை தவிர்த்த 29 மாவட்டங்களும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.கடும் வறட்சியால் சம்பா பயிர் விளைச்சலே இல்லாமல் போனது. சுமார் 10 லட்சம் விவசாயிகள் இதனால்பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 1,000 வீதம் நிதியுதவி வழங்கப்படும். அதிகபட்சம் 5 ஏக்கர் வரை நிவாரணம்வழங்கப்படும். ரு விவசாயிக்கு ரூ. 5,000க்கு மேல் நிவாரணம் வழங்கப்படாது.
அடுத்த வாரம் முதல் இந்த நிவாரண உதவி வினியோகம் ஆரம்பிக்கப்படும் என்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications