ஆயிரக்கணக்கில் காலியாகக் கிடக்கப் போகும் பி.இ. சீட்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டும் பொறியியல் கல்லூரிகளில் மேலும் ஆயிரக்கணக்கான இடங்கள் இடங்கள்காலியாகவே இருக்கும் என்று தெரிகிறது.

இந்த ஆண்டு ப்ரி சீட்களை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. எல்லா மாணவர்களும் குறைந்தபட்சம் ரூ. 30,000கட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் காலியாக இருக்கப் போகும் இடங்களின் எண்ணிக்கைஅதிகரிக்கும் என்று தெரிகிறதி.

கடந்த 3 ஆண்டுகளாகவே பொறியல் கல்லூரிகளில் இடம் பிடிப்பதற்கு போட்டி குறைந்துவிட்டது. இதற்குஅதிகமான கல்லூரிகள் தொடங்கப்பட்டது ஒரு காரணம், இன்னொரு முக்கிய காரணம் சாப்ட்வேர் தொழிலில்ஏற்பட்ட சரிவு. இதனால் படித்துவிட்டு வேலைக்காகக் காத்திருக்கும் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்களின்எண்ணிக்கை பல லட்சத்தைத தாண்டிவிட்டது.

இதனால் போட்டி போட்டுக் கொண்டு பொறியியல் கல்லூரிகளில் நன்கொடையை அள்ளிக் கொடுத்து சீட்வாங்கும் மோகம் குறைந்துவிட்டது. நல்ல மார்க் எடுத்து நுழைவுத் தேர்வில் வென்று ப்ரீ சீட் கிடைத்த மாணவர்கள்தான் பெரும்பாலும் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்தனர்.

மேனேஜ்மெண்ட் கோட்ட எனப்படும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் நன்கொடையை அள்ளிக் கொடுத்தும், கட்டணசீட்களை வாங்கியும் மாணவர்கள் சேருவது குறைந்துவிட்டது. இதனால் கடந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில்கிட்டத்தட்ட 20,000 இடங்கள் காலியாகவே இருந்தன. இவற்றின் பெரும்பாலானவை பேமெண்ட் சீட்கள்.

கட்டணத்தையும் நன்கொடையையும் எவ்வளவோ குறைத்தும் கூட மாணவர்கள் இந்த இடங்களில் சேரவில்லை.இதனால் இந்த முறை பல தனியார் கல்லூரிகளும் தங்களது நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உள்ள சீட்களைக் கூடஅண்ணா பல்கலைத்துக்கு ஒதுக்க முன் வந்துள்ளன.

அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் சிங்கிள் விண்டோ அட்மிஷன் (நுழைவுத் தேர்வு மற்றும் கவுன்சிலிங்) மூலம்எப்படியாவது தங்கள் கல்லூரிகளுக்கு மாணவர்களை இழுக்க இந்தத் தனியார் கல்லூரிகள் போட்டி போட்டுவருகின்றன. இதனால் அண்ணா பல்கலைழக்கழகம் இந்த ஆண்டு பி.இ. படிப்பில் சேருவதற்கான குறைந்தபட்சகட்-ஆப் மதிப்பெண்ணை மிகவும் குறைவாகவே நிர்ணயிக்க உள்ளது.

இதனால் குறைந்தபட்சம் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருந்தாலே பி.இ. படிப்பில் சேர்ந்துவிட முடியும் என்ற சூழல்உருவாகியுள்ளது.

இதுவரை சுமார் 15,000 மேனேஜ்மெண்ட் கோட்ட சீட்களை பல தனியார் கல்லூரிகளும் அண்ணாபல்கலைக்கழகத்திடம் ஒப்படைத்துவிட்டன. மேலும் 15,000 சீட்கள் வரை ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.இது தவிர தனியார் சிறுபான்மையினர் கல்வி நிர்வாகங்களிடம் இருந்து 37,000 இடங்கள் அண்ணாபல்கலைக்கழகத்துக்கு வரும்.

இதனால் அண்ணா பல்கலைக்கழகம் மட்டும் சுமார் 80,000 மாணவர்களுக்கு பிஇ சீட்களை ஒதுக்க முடியும்.ஆனால், இத்தனை சீட்கள் இருந்தாலும் சேருவதற்கு மாணவர்கள் தயாராக இருக்கிறார்களா என்பது தான் கேள்வி.

கடந்த ஆண்டு வரை இருந்தது போல இந்த முறை ப்ரி சீட் இல்லை. எல்லா மாணவர்களுமே குறைந்தபட்சம் ரூ.30,000 கட்டணம் செலுத்தியாக வேண்டும். எல்லா கட்டணத்தையும் சேர்த்தால் அது ரூ. 75,000த்தைத்தொட்டுவிடும். இது தவிர வருடம்தோறும் குறைந்தபட்சம் ரூ. 20,000 வரை கட்டணமாகப் பறிக்கப்படலாம்.

இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தின் சிங்கிள் விண்டோ முறையில் சீட் கிடைத்தாலும் பணம் கட்டினால் தான்கல்லூரியில் சேர முடியும். இதை வைத்தே காசு பார்த்துவிட தனியார் கல்லூரிகள் முயல்கின்றன. இதனால் தான்தங்களது மேனேஜ்மெண்ட் கோட்ட சீட்களையும் கூட அண்ணா பல்கலைக்கழகத்துக்குத் தந்துள்ளன.

ஆனால், இவ்வளவு செலவு செய்ய ஏழை மாணவர்களால் நிச்சயம் முடியாது. இதனால் அண்ணா பல்கலைக்கழகம்சீட் ஒதுக்கினாலும் இவர்கள் சேர முடியாது. வசதி படைத்தவர்கள் மட்டுமே பிஇ சேர முடியும். ஆனால், படிப்பைமுடித்தாலும் வேலை வாய்ப்புக்கள் இல்லாததால் இவ்வளவு பணத்தை இதில் போட வேண்டுமா என்ற எண்ணம்வசதியான மாணவர்களின் குடும்பத்தினர் மத்தியில் நிலவுகிறது.

இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காலியாகக் கிடக்கப் போகும் பி.இ. சீட்களின் எண்ணிக்கை மேலும்பல ஆயிரங்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரேங்க் பட்டியல்: ஜூன் 15ல் வெளியாகும்

இதற்கிடையே பி.இ. படிப்புக்கான நுழைவுத் தேர்வின் ரிசல்ட் ஜூன் மாதம் 15ம் தேதி வெளியாகிறது.

ரேங்க் பட்டியல் வெளியான பின்னர் வரும் ஜூன் 23ம் தேதி கவுன்சிலிங் தொடங்கும். இதில் சிங்கிள் விண்டோமூலம் மாணவர்களுக்கு கல்லூரிகள் ஒதுக்கப்படும். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சென்னை,மதுரை, திருச்சி. கோவையில் கவுன்சிலிங் நடக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+