சென்னையில் வெயிலுக்கு 2 பேர் பலி
சென்னை:
சென்னை நகரில் நிலவும் கடும் வெயிலுக்கு 2 பேர் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் கத்திரி வெயில் மிகக் கடுமையாக உள்ளது. சென்னை நகரில் குறைந்தபட்சமே 105டிகிரி வெயில் அடித்து வருகிறது. இதனால் மக்கள் நரக வேதனையை அனுபவித்து வருகின்றனர்.
வெயில் கொடுமைக்கு சென்னையில் மட்டும் 2 பேர் பலியாகியுள்ளனர்.
கடலூரைச் சேர்ந்த வேணுகோபால் என்ற இளைஞர் தாம்பரம் பஸ் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தார். கடும் வெயிலில் நின்று கொண்டிருந்த அவர் தலை சுற்றி மயங்கி விழுந்தார். அந்தஇடத்திலேயே அவர் பலியானார்.
அதேபோல மாங்காடு அருகே நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவரும் சாலையிலேயேசுருண்டு விழுந்து இறந்தார். அவர் யார் என்ற விவரம் தெரியவில்லை.
முன்னதாக இந்த வெயிலுக்கு தமிழகத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். இப்போது பலியானோர்எண்ணிக்கை 5 ஆகிவிட்டது.
வழக்கம்போல் அரக்கோணத்தில் தான் கடும் வெயில் அடித்து வருகிறது. அங்கு நேற்றும் 113 டிகிரிவெயில் பதிவாகியுள்ளது.
100 டிகிரிக்கு மேல் வெப்பம் பகுதிகள் விவரம்:
வேலூர்- 110 டிகிரி
பாளையம்கோட்டை- 107 டிகிரி
சென்னை- 105 டிகிரி
பாண்டிச்சேரி- 105 டிகிரி
கடலூர்- 104 டிகிரி
மதுரை- 102 டிகிரி
நாகப்பட்டிணம்- 102 டிகிரி
கோவை- 100 டிகிரி
திருச்சி- 100 டிகிரி
தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதுமே கடும் வெப்பம் நிலவுகிறது. ஆந்திராவில் கடும் வெயிலுக்கு இதுவரை370 பேர் பலியாகியிருப்பதாகத் தெரிகிறது. வழக்கமாக குளிர் நிலவும் பெங்களூரில் கூட 99 டிகிரி வெப்பம் நிலவஆரம்பித்துள்ளது.
நாளையுடன் அக்னி நட்சத்திர காலம் முடிவடைவதால் வெயில் குறைய ஆரம்பிக்கும் என்ற நம்பிக்கைஏற்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications