மீண்டும் தமிழகத்தை தாக்கிய 93 ஆண்டு கடும் வெப்பம்
சென்னை:
கத்திரி வெயில் முடிந்து விட்டதே என்ற நிம்மதியைக் குலைக்கும் வகையில், சென்னை நகரில்இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று பயங்கர வெப்பம் தாக்கியது.
93 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தைத் தாக்கிய பயங்கர வெப்பம் நேற்றும் மீண்டும் தாக்கியது.சென்னையில் இந்த ஒரே கோடையில் முதன்முதலாக 112 டிகிரி பாரன்ஹீட் வெயில் இரண்டு முறைபதிவாகிவிட்டது.
அரக்கோணத்தில் இன்னும் அதிகமாக 113 டிகிரி வெப்பம் பதிவானது. அரக்கோணத்தில் இந்தவெப்பம் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கொண்டுள்ளது.
அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் முடிந்து விட்டது. இதனால் வெப்பநிலைபடிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கத்திரி முடிவுக்கு வந்த அடுத்த நாளே, வரலாறு காணாத அளவுக்கு வெப்பநிலைபதிவானது.
நேற்றைய சென்னை நகரின் வெப்பநிலை 112 டிகிரி ஆகும். கடந்த 93 ஆண்டுகளில் இதுபோலகடும் வெயில் தமிழகத்தை 3 முறை தான் தாக்கியுள்ளது.
93 ஆண்டுகளுக்கு முன் அதாவது, 1910ம் ஆண்டு மே 21ம் தேதிதான் அதிகபட்சமாக 112 டிகிரிவெயில் பதிவானது. இதன் பிறகு 1980ம் ஆண்டு மே 25ம் தேதி 112 டிகிரி வெப்பம் பதிவானது.
அதன் பிறகு 23 ஆண்டுகள் கழித்து இந்த ஒரே மாதத்தில் (22 மற்றும் 29ம் தேதிகளில்) இரண்டுமுறை 112 டிகிரி வெப்பம் பதிவாகிவிட்டது.
வட மேற்கு பருவக் காற்று ஈரப்பதம் இன்றி காணப்படுவதால் அனல் காற்றும், கடும் வெப்பநிலையும் நீடிப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதே நிலை மேலும் சிலநாட்களுக்கும் நீடிக்குமாம்.
கடும் வெப்பத்துக்கு இடையிலும் மீனம்பாக்கம், கிண்டி, தாம்பரம் ஆகிய பகுதிகளில் மாலையில்லேசான மழை பெய்தது.
சென்சுரி போட்ட மற்ற இடங்கள்:
வேலூர்- 110 டிகிரி
நாகப்பட்டிணம்- 106 டிகிரி
பாளையம்கோட்டை- 103 டிகிரி
மதுரை- 101 டிகிரி
திருச்சி- 100 டிகிரி
சேலம்- 100 டிகிரி
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications