மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்தாரா கருணாநிதி?
சென்னை:
சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி தனது வீட்டுக்குப் பின் புறம் மாநகராட்சிக்குச் சொந்தமான780 சதுர அடியை ஆக்கிரமித்துள்ளதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சியில் துணை மேயர் கராத்தே தியாகராஜன் தீர்மானமும் கொண்டு வந்துநிறைவேற்றினார். இந்த ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தை அடிப்படையாக வைத்து கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டை மாநகராட்சி அதிகாரிகளைவிட்டு அளவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிடலாம் என்று தெரிகிறது.
ஏற்கனவே, அண்ணா அறிவாலயம் அமைந்துள்ள அண்ணா ரோட்டிலும் மாநகராட்சி நிலத்தை திமுகஆக்கிரமித்துள்ளதாக கராத்தே தியாகராஜன் புகார் கூறியது குறிப்பிடத்தக்கது.
மின் இணைப்பு தராமல் இழுத்தடிப்பு:
இது தவிர சி.ஐ.டி. நகரில் கருணாநிதி கட்டி வரும் வீட்டுக்கு மின் இணைப்பு தராமல் தமிழக அரசு பிரச்சனைசெய்து வருகிறது. மின் இணைப்புப் பெற மாநகராட்சியின் நோ-அப்ஜெக்சன் சான்றிதழைப் பெற வேண்டும்.
ஆனால், இந்தச் சான்றிதழைத் தர வேண்டாம் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு கராத்தே தியாகராஜன் மூலம்உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் பல வாரங்களாக முயன்றும் கருணாநிதியின் வீட்டினரால்மாநகராட்சியிடம் சான்றிதழ் பெற முடியவில்லை என்று தெரிகிறது.
இந்தச் சான்றிதழ் இல்லாவிட்டால் நிரந்தர மின் இணைப்புத் தர மாட்டோம் என மின்துறையினர் திட்டவட்டமாகக்கூறிவிட்டனர்.
இதை எதிர்த்து நீதிமன்றத்தில் கருணாநிதி வழக்குப் போடத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications
