லண்டன், துபாய் நிகழ்ச்சிகளால் தயாரிப்பாளர்களிடையே சண்டை
சென்னை:
தயாரிப்பாளர்கள் சங்க பொதுக் குழுவைக் கேட்காமலேயே துபாய், லண்டனில் கலை விழாவைநடத்தியுள்ளதாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க சங்க நிர்வாகிகள் மீது, இந்தஅமைப்பின் முன்னாள் தலைவர் கே.ஆர்.ஜி. (கே.ராஜகோபால்) குற்றம் சாட்டியுள்ளார்.
நடிகர், நடிகையரின் சம்பளத்தைக் குறைக்கக் கோரி வரும் நிலையில், அவர்களது உதவியுடன் நிதிசேர்த்தால், பின்னர் சம்பளத்தைக் குறைக்குமாறு அவர்களை வற்புறுத்த முடியாது என்று அந்தஅதிருப்தி தயாரிப்பாளர்கள் கருதுகிறார்கள்.
இதனால் நடிகை, நடிகர்களுக்கு தயாரிப்பாளர்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய நிலை ஏற்படும்என்றும் அவர்கள் கூறுகின்றனர். இவர்கள் அனைவரும் தற்போது கே.ஆர்.ஜி. தலைமையில் ஒன்றுதிரண்டுள்ளனர்.
இந்த அதிருப்தியாளர்களின் கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்திற்குப் பிறகு கே.ஆர்.ஜி.செய்தியாளர்களிடம் பேசுகையில், பொதுக்குழுவைக் கேட்காமல் பொதுக் குழுவின் ஒப்புதல்பெறாமல் தற்போதைய சங்க நிர்வாகிகள், கலை விழாவை நடத்தியுள்ளனர்.
இது சங்க விதிறைகளை மீறும் செயல். தயாரிப்பாளர்களுக்காக நிதி சேர்த்துக் கொடுக்க நடிக,நடிகையர் முன் வந்தது வரவேற்புக்குரியதுதான்.
ஆனால், இந்தக் கலை விழாவில் வசூலாகும் பணம் எவ்வளவு? இந்த நிகழ்ச்சிகளுக்காகதயாரிப்பாளர் சங்கம் செய்த செலவு என்ன என்பதை சங்க நிர்வாகிகள் விளக்க வேண்டும்.
திருட்டு விசிடியை ஒழிப்பது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் உருப்படியான வேலை எதையும்செய்யவில்லை. முதல்வரைப் போய்ப் பார்த்திருக்க வேண்டும். ஆனால் பார்க்கவில்லை.
அமைச்சரையாவது பார்த்திருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் சம்பந்தப்பட்ட காவல்துறைஅதிகாரியையாவது பார்த்திருக்க வேண்டும். யாரையும் அவர்கள் பார்க்கவில்லை என்றார்கே.ஆர்.ஜி.
ஆனால், கே.ஆர்.ஜியின் நடவடிக்கைளுகளுக்கு ஏற்கனவே, தயாரிப்பாளர் கே.ராஜன் கடும்எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சங்கத்தை உடைக்க கே.ஆர்.ஜி. முயல்வதாக அவர் புகார் கூறியுள்ளார். துபாய், லண்டன் கலைநிகழ்ச்சிகளுக்குச் சென்று விட்டதால், சங்க தலைவர் முரளிதரன் உள்ளிட்ட நிர்வாகிகள் சென்னையில்இல்லை.
அவர்கள் வந்தவுடன்தான் இப்பிரச்சினை எந்த ரூபத்தில் போகும் என்பது தெரிய வரும்.
முடிந்தது துபாய் , லண்டன் கலைநிகழ்ச்சி:
இதற்கிடையே துபாய் மற்றும் லண்டனில் நட்சத்திரக் கலை நிகழ்ச்சி நடத்திய நடிகர் நடிகைகள்நேற்று இரவு சென்னை திரும்பினர்.
லண்டனில் வெம்லே அரேனா அரங்கில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் இவர்களின் நிகழ்ச்சிகள்நடந்தன.
குஷ்பூ-மும்தாஜ் இணைந்து கிளாஸிக்கல் நடனம், தேவதாஸ் ஹிந்திப் பாடலுக்கு தேவயானியின் நடனம், சூர்யா- ஜோதிகா ஜோடியின் காக்க காக்க பாடல் நடனம், சாமி படப் பாடலுக்கு திரிஷாவின் நடனம், பரசுராம்மற்றும் விசில் பட பாடல்களுக்கு காயத்ரி ரகுராமின் நடனம் ஆகியவை இதில் மிக அதிகவரவேற்பைப் பெற்றன.
தம் பட பாடலுக்கு சிலம்பரசன் ஆடினார். 12 பி மற்றும் அன்பே அன்பே பாடல்களுக்கு ஷாம் -மாதவன் இணைந்து ஆடினர்.
ஆசை ஆசையாய் படப் பாடலுக்கு ஜீவா - ரதி ஜோடி சேர்ந்து ஆடினர். மிஸ்டர் பாரத் படத்தின் என்னம்மா கண்ணு பாடலுக்கு சத்யராஜூம் அவரது மகன் சிபிராஜூம் ஆடினர்.
தில் படத்தில் இடம்பெற்ற உன் சமையல் அறையில் பாடலை விவேக் தன்னுடைய பாணியில்உன் பிளாட்பாரத்தில் நான் குப்பையா ? குப்பைத் தொட்டியா ?.... என்று மாற்றிப் பாடி கலக்கினார்.
இவர்கள் தவிர காயத்ரி ஜெயராம், விக்ரம், நெப்போலியன், ரீமாசென், விந்தியா, மீனா, கிரண்,வடிவேலு, ஆகியோரின் நடன நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்ட நடிகை, நடிகர்கள் அணி, அணியாக நேற்றிரவு முதல் சென்னைதிரும்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications