அழகிரியிடம் போலீஸ் விசாரணை தொடர்கிறது: வீட்டிலும் சோதனை?

Subscribe to Oneindia Tamil

மதுரை:

Alagiri in police custodyதா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அழகிரி மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில்வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.

நேற்று மாலை முதல் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. நாளை பிற்பகல் 3.30 மணி வரைஅவரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி தந்துள்ளது. இதன் பின்னர் அவரை நீதிமன்றத்தில்ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி வனிதா உத்தரவிட்டுள்ளார்.

நேற்று அவர் செல்லூர் காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார். பின்னர்தல்லாகுளம் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.

தா.கியுடன் இருந்த கருத்து வேறுபாடு, கடிதத் தொடர்புகள், தொலைபேசி உரையாடல், கைதுசெய்யப்பட்டுள்ள அவரது நண்பர்களான மன்னன், சேட், கோபி ஆகியோர் குறித்து அழகிரியிடம்போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் சோதனை:

விசாரணையைத் தொடர்ந்து இன்று அழகிரி வீட்டில் சோதனை நடத்தவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கான கோர்ட் அனுமதி கிடைத்தவுடன் அழகிரியின் மதுரை அழகப்பன்நகர் வீட்டில் சோதனை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

2 நாள் போலீஸ் காவலுக்குப் பிறகு நாளை மாலை அழகிரி மீண்டும் மதுரை 6-வது நீதிமன்றத்தில்ஆஜர் செய்யப்படவுள்ளார்.

கருணாநிதிக்கு எழுதிய கடிதம்:

முன்னதாக தா.கிருட்டிணனுடன் தனகுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு தொடர்பாக கருணாநிதிக்குஅழகிரி எழுதிய கடிதத்தை அவரது வக்கீலே மதுரை நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார்.

தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மு.க.அழகிரி ஜாமீன் கோரி மனுசெய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நேற்று மதுரை 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில்விசாரணைக்கு வந்தது.

நீதிபதி வனிதா முன்னிலையில் விசாரணை நடந்தது. அப்போது அழகிரியின் வக்கீல் பிரேம்ராஜ்அம்புரோஸ் வாதாடுகையில், தா.கிருட்டிணன் கொலை வழக்கு தொடர்பாக போலீஸார் 2கடிதங்களை கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர்.

ஆனால், கருணாநிதிக்கு மு.க.அழகிரி எழுதிய மூன்றாவது கடிதத்தை வேண்டுமென்றே போலீசார்கோர்ட்டில் தாக்கல் செய்யாமல் விட்டு விட்டனர்.

அந்த கடிதம் தற்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது என்று கூறிய அம்புரோஸ்,அக்கடிதத்தை நீதிபதியிடம் கொடுத்தார்.

அந்தக் கடிதத்தையும் நீதிமன்றத்தில் அம்புரோஸ் வாசித்தார்.

அன்புள்ள அப்பாவுக்கு...

அதில், அன்புள்ள அப்பாவுக்கு, தாங்கள் அனுப்பிய தா.கிருட்டிணன் கடிதத்தைப் படித்தேன்.

அவர் மீது குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காக நான் கடிதம் எழுதவில்லை.

அவரது விளக்கத்தைப் படித்த பிறகு, நான் சொல்ல விரும்புவது, கட்சிக்குள் ஒற்றுமை இருக்கவேண்டு என்பதற்காகத்தான் எழுதினேனே இல்லாமல், வேறல்ல என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவரிடம் சொல்லி, அவர் ஊரில் கழக இளைஞர்களை இனிமேல் இதுபோன்ற செயல்களில்ஈடுபடாமல் இருக்குமாறு அறிவுறுத்துவது நல்லது.

இவன்,

அன்புள்ள

மு.க.அழகிரி

இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மறைத்துவிட்ட போலீஸ்:

இந்தக் கடிதத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்காத போலீசார், தா.கி. மீது கடுமையாகக் குற்றம் சுமத்திஅழகிரி எழுதிய மற்ற இரு கடிதங்களை மட்டுமே சமர்ப்பித்தனர்.

சிவகங்கையில் நடந்த ஒரு திமுக நிகழ்ச்சியில் அழகிரியை எதிர்த்து தா.கி. ஆதரவாளர்கள் கோஷம்போட்டதையடுத்து அது குறித்து கருணாநிதிக்கு அழகிரி எழுதினார். இதற்கு தா.கியிடம் ஸ்டாலின் மூலமாககருணாநிதி விளக்கம் கேட்டார். அப்போது தா.கி. தனது தரப்பு விளக்கத்தைத் தந்தார். இதையும் அழகிரிக்குகருணாநிதி தெரிவித்தார்.

இதையடுத்து தா.கி. மீது தனக்கு தனிப்பட்ட விரோதம் ஏதும் இல்லை என்பதை கருணாநிதிக்கு விளக்கும் வகையில்இந்த மூன்றாவது கடிதத்தை அழகிரி எழுதியுள்ளார். தனக்கும் தா.கிக்கும் இடையே பெரிய அளவில்வன்மம் ஏதும் இல்லை என்றரீதியில் உள்ளது இக் கடிதம்.

ஆனால், இந்தக் கடிதத்தை நீதிமன்றத்திடம் ஒப்படைக்காமல் போலீசார் மறைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+