இலவச பஸ் பாஸ் ரத்து: மாணவ, மாணவிகள் தலையில் இடியை இறக்கிய அரசு
சென்னை:
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே இனிமேல் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் ரத்துசெய்யப்படுகிறது.
தமிழகத்தில் அரசுப் பள்ளி, கல்லூரிகளின் எண்ணிக்கை மிகக் குறைவு. பெரும்பாலானவை மேனேஜ்மென்ட் கல்விநிலையங்கள், மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் தான். இப்போது இந்த பெரும்பாலான கல்விக் கூடங்களில்படிக்கும் மாணவர்களின் தலையில் தான் அதிமுக அரசு கையை வைத்துள்ளது.
மேலும் அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு பஸ்களில் பயணம் செய்ய மாதம் 70 டோக்கன்கள் வழங்கப்பட்டுவந்தது. இனி இந்த டோக்கன்கள் எண்ணிக்கை 40 ஆகக் குறைப்படுகிறது.
அதே போல இந்த டோக்கன்களின் கட்டணமும் 70 பைசாவில் இருந்து 2 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் குடியரசு தினம், சுதந்திர தினம் தவிர மற்ற விடுமுறை நாட்களில் அரசு, பள்ளிக் கல்லூரி மாணவர்கள்இலவச பஸ் பாஸை உபயோகிக்கவும் தடை விதிக்கப்படுகிறது. இதனால் சனிக்கிழமைகளில் ஸ்பெஷல் கிளாஸ்இருந்தால் கூட பாஸை உபயோகிக்க முடியாத சூழ்நிலையை அரசு ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே கல்வியைக் குறி வைத்து பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அரசுஊழியர்களளோடு சேர்த்து ஆசிரியர்களின் சலுகைகள் பறிக்கப்பட்டன. மேலும் மாணவர்களுடன் ஏதாவது ஒருமோதலை அரசு சந்தித்த வண்ணம் உள்ளது.
இப்போது பஸ் பாஸ் சலுகைகள் பறிக்கப்பட்டதால் சுமார் 23 லட்சம் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படும் சூழல்உருவாகியுள்ளது. நடுத்தர, கீழ் நடுத்தர, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவ மாணவர்களுக்கு இந்த இலவச பஸ்பாஸ் திட்டம் மிகுந்த உதவியாக இருந்தது.
இப்போது பெரும் சுமையை மக்கள் மீது திணித்துள்ளது அரசு.
பிளஸ் டூ தேர்வு கட்டணம் உயர்வு:
இதற்கிடையே பிளஸ் டூவில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான மறு தேர்வுக் கட்டணம் ரூ. 1,000அதிகரிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான பிளஸ் டூ தேர்வு முடிவுகளில் 3 பாடங்களில் மட்டும் தோல்வியடைந்த மாணவர்கள்உடனடியாக மறு தேர்வு எழுதி இந்த ஆண்டே உயர் கல்வியில் சேர வழி வகை செய்யப்பட்டுள்ளது. இந்தத்தேர்வுகள் அடுத்த மாதம் நடக்கவுள்ளன.
இதற்கான கட்டணம் முதலில் ஒரு பாடத்துக்கு ரூ. 85 ஆகவும், இரு பாடங்களுக்கு ரூ. 135 ஆகவும் மூன்றுபாடங்களுக்கு ரூ. 185 ஆகவும் இருந்தது.
ஆனால், இந்தக் கட்டணங்களை அரசு ரூ. ,1085, ரூ. 1,135, ரூ. 1,185 ஆக உயர்த்தியுள்ளது.
சிறப்புக் கட்டணம் என்ற பெயரில் ரூ. 1,000 அதிகமாக கட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ராமதாஸ் கடும் எதிர்ப்பு:
மாணவர்களின் பஸ் கட்டண சலுகை பறிப்புக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழை எளியவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளை இந்த அரசுதொடந்து பறித்தவண்ணம் உள்ளது. அதே நேரத்தில் வெட்டியாய் அமைச்சர்களை நியமித்து வீண் செலவுகளைச்செய்து வருகிறது.
பள்ளி, கல்லூரிகளைத் தொடங்கி நடத்துவது எங்கள் பொறுப்பல்ல என்று இந்த அரசு தட்டிக் கழித்து வருகிறது.இந் நிலையில் அரசுக் கல்விக் கூடங்களுக்கு மட்டும் தான் இலவச பஸ் பாஸாம். கல்வியை தனியாரிடம்ஒட்டுமொத்தமாய் விற்றுவிடுகிற திட்டம் தான் இது.
இதன் மூலம் பிற்பட்டவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள், பொருளாதாரரீதியில் நசிந்தவர்களை மேலும்படிக்கவிடாமல் செய்து சமூக நீதியைக் குலைக்க இந்த அரசு முயல்கிறது என்று கூறியுள்ளார்.
கல்வியைக் கண்டாலே அதிமுக அரசுக்கு அப்படி என்ன கோபமோ தெரியவில்லை.












Click it and Unblock the Notifications