அமைச்சரவை மாற்றம்: 3 பேருக்கு கல்தா- 5 பேர் சேர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

K B Anbazhaganதமிழக அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்படவுள்ளது. புதிதாக 5 பேர் சேர்க்கப்படுகின்றனர். 3 பேர்நீக்கப்படுகின்றனர்.

செய்தித் தொடர்புத்துறை துறை அமைச்சர் கே.கே.பாலசுப்பிரமணியம், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வடிவேலு,பிற்பட்டோர் நலத் துறை அமைச்சர் பாப்பா சுந்தரம் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுகின்றனர்.

Annaaviமுன்பு அமைச்சரவையில் இடம் பெற்று பின்னர் நீக்கப்பட்டிருந்த தளவாய் சுந்தரம் மற்றும் பாண்டுரங்கன்ஆகியோருக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் தரப்படவுள்ளது. தளவாய்க்கு நலத்துறை வழங்கப்படுகிறது.பாண்டுரங்கனுக்கு ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கப்படுகிறது.

தாமரைக்கனியின் மகன் இன்பத் தமிழனும் அமைச்சராகிறார். அவருக்கு விளையாட்டுத் துறை வழங்கப்படுகிறது.இவர்கள் தவிர அன்பழகன், அண்ணாவி ஆகியோரும் அமைச்சர்களாகின்றனர். இதில் அன்பழகனுக்கு செய்தித்தொடர்புத்துறையும், அண்ணாவிக்கு பிற்பட்டோர் நலத்துறையும் தரப்படுகிறது.

நேற்று மாலை திடீரென கவர்னர் மாளிகைக்குச் சென்ற முதல்வர் ஜெயலலிதா இந்த புதிய அமைச்சர்கள்பட்டியலைத் தந்தார். அதற்கு கவர்னர் ராம்மோகன் ராவ் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இன்று இந்த புதியஅமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்ச்சி பிற்பகல் 2 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடக்கிறது.

நலத்துறையும் விளையாட்டுத்துறையும் இதுவரை அமைச்சர் செம்மலையிடம் இருந்தன. இனி அவர்கல்வியமைச்சராக மட்டும் தொடர்வார்.

Paandurangaமேலும் இதுவரை அமைச்சர் நைனார் நாகேந்திரனிடம் இருந்த மின்சாரத்துறை மீண்டும் சட்ட அமைச்சர்ஜெயக்குமாரிடம் தரப்படுகிறது. இதனால் நைனார் நாகேந்திரன் இனி தொழில்துறை அமைச்சராக மட்டுமேதொடர்வார்.

அறை பாண்டுரங்கன்:

இப்போது மீண்டும் அமைச்சராகும் பாண்டுரங்கன், கடா மீசையுடன் உலா வருபவர், சுவாரஸ்யமானவர். முதல்வர்ஜெயலலிதாவைப் பார்த்தால் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் காலில் விழுவார்கள், குனிந்து நின்று பவ்யம்காட்டுவார்கள்.

Thalavai Sundaramஆனால், இவரோ ஜெயலலிதாவைப் பார்த்தால் சாமியைப் பார்த்து மாதிரி கன்னத்தில் போட்டுக் கொள்வார்.(அறைந்து கொள்வார் என்று சொல்வதே சரி. அந்த அளவுக்கு ஓங்கி கன்னத்தில் அடித்துக் கொள்வார்.)

வள்ளல் தளவாய் சுந்தரம்:

அதிமுக எதிர்க் கட்சியாக இருந்தபோது கோர்ட் படிக்கட்டுகளில் ஜெயலலிதாவும் சசிகலாவும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தகாலத்தில் கூடவே வருவார் தளவாய் சுந்தரம். வழக்கறிஞரான இவர் ஜெயலலிதாவுக்காக வாதாடியது இல்லை. ஆனால்,கூடவே வருவார் போவார். இதனால் எம்.பி. பதவி கிடைத்தது. தொடர்ந்து பொதுப் பணித்துறை அமைச்சர் பதவியும் கிடைத்தது.இதையடுத்து வருவாய்த்துறை கிடைத்தது.

Inba thamizhanஆனால், வருவாய்த்துறை அமைச்சராக இருந்தபோது கல்வித்துறை அமைச்சராக இருந்த தம்பிதுரையின் கல்லூரிக்கு அரசு நிலத்தைவாரிக் கொடுத்த வள்ளல் இவர். இது தொடர்பாக வழக்கும் போடப்பட்டுள்ளது. ஏற்கனவே டான்சி நில விவகாரத்தில்சிக்கியுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு இது டென்சனைக் கொடுக்க தம்பிதுரையும், தளவாய் சுந்தரமும் பதவி இழந்தனர்.

இப்போதும் தம்பிதுரை ஒதுக்கியே வைக்கப்பட்டுள்ளார். ஆனால், தளவாய்க்கு நல்ல காலம் பிறந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+