பா.ஜ.கவுக்கும் தமிழுணர்வு உண்டாம்... சொல்கிறார் துணை தலைவர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழை செம்மொழியாக்கக்(classical language) கோரி, சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும்முடிவை தமிழறிஞர்கள் கைவிட வேண்டும் என்று மாநில பா.ஜ.க. துணைத் தலைவர்வைத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் மொழியை செம்மொழியாக மத்தியஅரசு அறிவிப்பதில் தாமதம் காட்டுவதால், 100 தமிழர்களுடன் தான் சாகும் வரை உண்ணாவிரதம்இருக்கப் போவதாக தமிழறிஞர் வா.சேதுராமன் அறிவித்துள்ளார்.

பாரதீய ஜனதாக் கட்சிக்கும் தமிழுணர்வு உண்டு. எனவே, மத்திய அரசிடம் கூறி தமிழைசெம்மொழியாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக பா.ஜ.க. வற்புறுத்தும்.

எனவே வா.சேதுராமன் தலைமையிலான தமிழறிஞர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும்முடிவை தயவு செய்து கைவிடவேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+