பெண் கமாண்டோ படை துவக்கம்: ஜெ. பெருமிதம்
சென்னை:
இந்தியாவிலேயே முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ள பெண் கமாண்டோ படையை முதல்வர் ஜெயலலிதாதொடங்கி வைத்தார்.
அதேபோல குற்றங்களை துப்பு துலக்குவதிலும், குற்றவாளிகளைப் பிடிப்பதிலும் நாம் முன்னணியில் இருக்கிறோம்.
பெண் கமாண்டோக்களுக்கு தேசிய பாதுகாப்புப் படை சிறப்புப் பயிற்சிகளை அளித்துள்ளது. பெண்கமாண்டோக்களுக்கு, ஆண்களுக்குக் கொடுக்கப்படும் அனைத்து சலுகைகளும் தரப்படும். மாதாந்திரப் படியாகரூ. 1,500 மற்றும் இதர சலுகைகளும் வழங்கப்படும்.
கன்னியாகும முதல் சென்னை வரையிலான 700 கிலோமீட்டர் தூரத்தை இந்த பெண் கமாண்டோக்கள் 72 மணிநேரத்தில் ஓடிக் கடந்துள்ளனர். தேசிய அளவில் இது போன்ற ஒரு முயற்சி இதுவரை நடந்ததில்லை என்றார்.
பெண் கமாண்டோக்களுக்கான பயிற்சியின்போது மிகச் சிறப்பாக செயல்பட்ட கலைச்செல்விக்கு ஜெயலலிதாபரிசு வழங்கிப் பாராட்டினார். நிகழ்ச்சியில் டிஜிபி கோவிந்த், தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், சென்னைநகர காவல்துறை ஆணையர் விஜயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications