5 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Thalavai Sundaramபுதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட 5 பேரும் இன்று பிற்பகல் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

தமிழக அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்பட்டது. புதிதாக 5 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 3 பேர்நீக்கப்பட்டனர்.

Paandurangaமுன்பு அமைச்சரவையில் இடம் பெற்று பின்னர் நீக்கப்பட்டிருந்த தளவாய் சுந்தரம் மற்றும் பாண்டுரங்கன்ஆகியோரும் தாமரைக்கனியின் மகன் இன்பத் தமிழன், அண்ணாவி, அன்பழகன் ஆகியோரும் இன்றுஅமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

இன்று பகல் 2 மணியளவில் கவர்னர் மாளிகையில் நடந்த எளிய நிகழ்ச்சியில் இவர்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

அவர்களுக்கு ஆளுனர் ராம்மோகன் ராவ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில்முதல்வர் ஜெயலலிதா, அமைச்சரவை சகாக்கள் கலந்துகொண்டனர்.

K B Anbazhaganதளவாய் சுந்தரத்துக்கு நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. பாண்டுரங்கனுக்கு ஊரக வளர்ச்சித்துறைஒதுக்கப்பட்டுள்ளது. இன்பத் தமிழனுக்கு விளையாட்டுத் துறையும், அன்பழகனுக்கு செய்தித் தொடர்புத்துறையும்,அண்ணாவிக்கு பிற்பட்டோர் நலத்துறையும் தரப்பட்டுள்ளது.

Annaaviசெய்தித் தொடர்புத்துறை துறை அமைச்சர் கே.கே.பாலசுப்பிரமணியம், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வடிவேலு,பிற்பட்டோர் நலத் துறை அமைச்சர் பாப்பா சுந்தரம் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

நலத்துறை மற்றும் விளையாட்டுத் துறையை கல்வி அமைச்சரான செம்மலை தான் இதுவரை கவனித்து வந்தார்.இப்போது அந்தத் துறைகள் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டன. இதனால், இனி அவர் கல்வியமைச்சராகமட்டும் தொடர்வார்.

Inba thamizhanமேலும் இதுவரை அமைச்சர் நைனார் நாகேந்திரனிடம் இருந்த மின்சாரத்துறை மீண்டும் சட்ட அமைச்சர்ஜெயக்குமாரிடம் தரப்பட்டுள்ளது. இதனால் நைனார் நாகேந்திரன் இனி தொழில்துறை அமைச்சராக மட்டுமேதொடர்வார்.

நேற்று மாலை கவர்னர் மாளிகைக்குச் சென்ற முதல்வர் ஜெயலலிதா இந்த புதிய அமைச்சர்களின் பட்டியலைத்தந்தார். அதற்கு கவர்னர் ராம்மோகன் ராவ் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இன்று இந்த புதிய அமைச்சர்களின்பதவியேற்பு நடந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+