• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

25 மாதங்களில் 26 பேர் நீக்கம்!

By Staff
|

சென்னை:

ஜெயலலிதா முதல்வரான பிறகு கடந்த 25 மாதங்களில் 26 அமைச்சர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

* தமிழக அமைச்சரவையில் இதுவரை 25 பேர் அமைச்சராக இருந்தனர். ஜெயலலிதாவின் ராசியான நம்பரான 9வரும் வகையில் அமைச்சரவை மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டே வந்தது. அதன்படி இப்போது 3 பேர்நீக்கப்பட்டு 5 பேர் சேர்க்கப்பட்டதால் எண்ணிக்கை 27 ஆகிவிட்டது. (2+7=9).

* ஜெயலலிதாவின் ஆட்சியில் நடந்துள்ள 11வது அமைச்சரவை மாற்றம் இது.

* 25 மாதங்களில் 26 பேர் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விவரம்:

அய்யாறு வாண்டையார், வி.ஜெயராமன், ஆர்.விஸ்வநாதன், ஏ.வெங்கடாசலம், ஏ.கே.செல்வராஜ், அன்வர் ராஜா,பாண்டுரங்கன், எஸ்.எஸ். திருநாவுக்கரசு, வளர்மதி ஜெபராஜ், வி.சரோஜா, வி.சுப்பிரமணியம்,எஸ்.பி.சண்முகநாதன், கே.ஆர். ராஜேந்திரபிரசாத், ஆர்.வைத்தியலிங்கம், சண்முகவேலு, சண்முகம், வில்வநாதன்,துரைராஜ், தனபால், நடராஜன்ஸ சுதர்சனம், தளவாய் சுந்தரம், தம்பிதுரை, பாப்பா சுந்தரம், ஆர்.வடிவேலு,பாலசுப்பிரமணியம் ஆகியோர்.

* மொத்தம் உள்ள 139 அதிமுக எம்.எல்.ஏக்களில் இதுவரை 48 எம்.எல்.ஏக்கள் அமைச்சர் பதவிவகித்துவிட்டனர். (ஆட்சி முடிவதற்குள் எல்லோருமே முன்னாள் அமைச்சர்களாக இருப்பார்கள் என்றுநம்பப்படுகிறது)

*ஒரு முறை பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் அன்வர்ராஜா, விஸ்வநாதன், தளவாய் சுந்தரம், பாண்டுரங்கன்உள்ளிட்டோர் மீண்டும் அமைச்சர் பதவியைப் பெற்றுள்ளனர்.

* பிற்பட்டோர் நலத் துறைக்கு மட்டும் இதுவரை 7 அமைச்சர்களை மாற்றிவிட்டார் ஜெயலலிதா. அதே போலஊரகத் தொழில்துறைக்கும் அமைச்சர்கள் 5க்கும் அதிகமாக மாறிவிட்டனர். இதனால் இந்த இருதுறைகளுமேராசியில்லாதவை என்று நடுங்குகின்றனர் அதிமுக அமைச்சர்கள்.

* இதுவரை பதவி இழக்காத அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், பொன்னையன், ஜெயக்குமார், செம்மலை,வளர்மதி ஆகியோர் மட்டும் தான். இதில் மற்றவர்களுக்கு துறைகள் மாறின. ஆனால், ஆரம்பம் முதலே வளர்மதிமட்டும் தொடர்ந்து சமூக நலத்துறை அமைச்சராகவே இருந்து வருகிறார்.

* அன்வர் ராஜா, பாண்டுரங்கன், தளவாய் சுந்தரம், விஸ்வநாதன், வைத்தியலிங்கம் ஆகியோர் பதவியை இழந்துமீண்டும் அமைச்சரானவர்கள்.

* மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில் பதவி பறிக்கப்பட்ட அமைச்சர்களுக்குப் பதிலாகஅதே மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களுக்கே இந்த முறை அமைச்சர் பதவிகள் தரப்பட்டுள்ளன.

*வடிவேலு, கே.கே.பாலசுப்ரமணியம் ஆகியோரிடம் இருந்து இப்போது அமைச்சர் பதவிகள் மட்டும்பறிக்கப்படவில்லை. அவர்கள் வசம் இருந்த வேலூர் மேற்கு, திருச்சி ஊரக மாவட்ட அதிமுக செயலாளர்பதவிகளையும் பறித்துள்ளார் ஜெயலலிதா.

* அதேபோல, முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். திருநாவுக்கரசுவிடம் இருந்து காஞ்சிபுரம் மேற்கு மாவட்டசெயலாளர் பதவியையும் பறித்துள்ள ஜெயலலிதா அதை கைத்தறித் துறை அமைச்சர் சோமசுந்தரத்திடம்கொடுத்துள்ளார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X