வீரப்பனின் கூட்டாளி கணபதி அப்பன் கைது: 16 ஆண்டுகளாய் தேடப்பட்டவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வீரப்பனின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவனும், வனத்துறை அதிகாரி சிதம்பரநாதன் கொல்ைலப்பட்டவழக்கில் கடந்த 16 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்தவருமான கணபதி அப்பனை சிபிசிஐடி போலீசார் கைதுசெய்துள்ளனர்.

கடந்த 1987ம் ஆண்டு ஜூன் மாதம் வீரப்பன் கும்பலால் வனத்துறை அதிகாரியான சிதம்பரநாதன், சையத்மெஹ்மூத், உதயராஜ் ஆகியோர் தாக்கப்பட்டனர். இதில் சிதம்பரநாதன் பலியானார். வீரப்பன் சதி செய்துஇவர்களை காட்டுக்குள் அழைத்துச் சென்று தாக்கிக் கொன்றான்.

இந்த வழக்கில் வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், குப்புசாமி, கணபதி அப்பன் ஆகிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் குப்புசாமி சில ஆண்டுகளுக்கு முன் ஈரோடு அருகே கைது செய்யப்பட்டான்.

இந் நிலையில் கணபதி அப்பன் தர்மபுரி மாவட்டம் நரிப்பள்ளம் என்ற காட்டுப் பகுதியை ஒட்டிய முத்துசாமி நகர்என்ற இடத்தில் பதுங்கி இருப்பதாக சிபிசிஐடி போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்ததனிப் படை போலீசார் கணபதி அப்பனை நேற்று முன் தினம் கைது செய்தனர்.

அவனை சத்தியமங்கலம் காட்டுக்குள் உள்ள அதிரடிப்படை முகாமுக்குக் கொண்டு சென்ற போலீசார் வீரப்பனின்மறைவிடங்கள் குறித்து விசாரணை நடத்தினர். அவனைக் கூட்டிக் கொண்டு காட்டுக்குள்ளும் சென்று சோதனைகள்நடத்தினர்.

ஆனால், இன்று தான் இவன் பிடிபட்ட விவரத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். தமிழக காவல்துறையின் கூடுதல்டிஜிபி ரமணி இன்று சென்னையில் நிருபர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+