என்ஜினியரிங் கல்லூரிகள்: இருப்பது 50,000 சீட்கள்- விண்ணப்பங்களோ வெறும் 37,000
சென்னை:
தமிழகத்தில் சிங்கிள் விண்டோ மூலம் நிரப்ப ஒதுக்கப்பட்டுள்ள 50,000 பொறியியல் கல்லூரிஇடங்களுக்கு வெறும் 37,000 மாணவர்களே விண்ணப்பித்துள்ளனர். இதனால் இந்தப் பிரிவில்மட்டும் 13,000 இடங்கள் காலியாகக் கிடக்கப் போகின்றன.
இந்த ஆண்டில் சிங்கிள் விண்டோ முறையில் மாணவர்களைச் சேர்க்க தங்களிடம் உள்ளமேனேஜ்மென்ட் சீட்களில் பெரும்பாலானவற்றையும் தனியார் கல்லூரி நிர்வாகங்கள் அண்ணாபல்கலைக்கழகத்திடம் ஒப்படைத்துள்ளன. இதனால் சுமார் 50,000 இடங்களை அண்ணாபல்கலைக்கழகத்தால் மாணவர்களுக்கு ஒதுக்க முடியும்.
ஆனால், இந்த இடங்களைப் பிடிக்கவும் மாணவர்களிடையே போட்டியில்லை.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள என்ஜினியரிங் சீட்களை விட குறைவான மாணவர்கள் தான் அதில்சேர முன் வந்துள்ளன.
மேலும் ப்ரீ சீட் கட்டணத்தையும் கூட தமிழக அரசு ரூ. 30,000 ஆக்கிவிட்டது. பிறகட்டணங்களையும் சேர்த்தால் பொறியியல் கல்லூரியில் நுழையவே ரூ. 45,000 வரை கட்டவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ப்ரீ சீட் பிரிவில் உள்ள 26,000 இடங்களில் சேரவும்மாணவர்கள் முன் வரவில்லை.
அதிகமான மதிப்பெண் வாங்கி ப்ரீ சீட் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் கூட கட்டணம் செலுத்தவசதியில்லாததால் சேர முன் வரவில்லை.
சிங்கிள் விண்டோ முறையில் அண்ணா பல்கலைக்கழகம் ஒதுக்கும் ப்ரீ சீட்களின் கட்டணமும் இதேஅளவில் தான் உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் ஒதுக்கும் மேனேஜ்மெண்ட் கோட்டா சீட்களின்கட்டணம் மிக பயஙகரமாக உள்ளது.
இது தவிர கடந்த ஆண்டுகளைப் போல் அல்லாமல் வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள்பேமெண்ட் சீட் பிரிவில் சேர இந்த ஆண்டு அனுமதிக்கப்படவில்லை.
தனியார் கல்லூரிகளின் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் சேர வேண்டும் என்றுநிர்பந்திக்கப்பட்டுள்ளனர். இதனால் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்துதமிழகத்துக்குப் படிக்க வந்த மாணவர்களும் கட்டணத்தைப் பார்த்து பயந்து ஓடும் நிலைஏற்பட்டுள்ளது.
இவ்வளவு பணத்தைப் போட்டு படிப்பை முடித்தும் அதற்கேற்ற வேலை வாய்ப்புக்களும்இல்லாததால் பொறியியல் கல்லூரிகளில் சேர மாணவர்களிடையேயும் பெற்றோர் இடையிலும்ஆர்வம் இல்லை.
இதனால் தான் அட்மிஷனுக்கு வந்துள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை இப்படி தடாலடியாகக்குறைந்துவிட்டது.
கடந்த ஆண்டு பி.இ. படிப்புக்கு 65,000 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில் சிங்கிள் விண்டோமூலம் மாணவர்களைச் சேர்க்க 52,000 இடங்கள் ஒதுக்கப்பட்டன. கட்-ஆப் மார்க்கைகுறைத்தபோதும் கூட 40,000 பேர் மட்டுமே சேர்ந்தனர்.
இதனால் 12,000 இடங்கள் (பெரும்பாலானவை மேனேஜ்மெண்ட் கோட்டாவை சேர்ந்தவை)காலியாகவே கிடந்தன. இது தவிர பேமெண்ட் சீட் கோட்டாவில் 8,000 இடங்கள் காலியாகக்கிடந்தன. (ஆக மொத்தம் 20,000 காலி இடங்கள்)
இந்த ஆண்டு காலியாகக் கிடக்கப் போகும் இடங்களின் எண்ணிக்கை 30,000த்தையும்தாண்டிவிடும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications