பிரிட்டன், சுவீடன், டச்சுத் தூதர்கள் புலிகளுடன் சந்திப்பு
கொழும்பு:
மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அறிவித்த சமரசத் திட்டத்தைவிடுதலைப் புலிகள் இன்று அதிகாரப்பூர்வமாக நிராகரித்தனர். இது தொடர்பாக ரணிலுக்கு புலிகளின் அரசியல்ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதற்கிடையே புலிகளை மீண்டும் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கச் செய்ய பிரிட்டன், சுவீடன், நெதர்லாந்துநாடுகளின் தூதர்களின் இன்று யாழ்பாணத்துக்குச் சென்று புலிகளின் பிரதிநிதிகளைச் சந்திக்க உள்ளனர்.
வட-கிழக்கு மாகாணங்களில் மறு கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள ஒரு அமைப்பை நிறுவுவதாகவும், அந்தஅமைப்பில் விடுதலைப் புலிகளுக்கு முக்கிய அதிகாரமும் நிதியும் வழங்குவதாகவும் சமீபத்தில் இலங்கை அரசுஅறிவித்தது. இதன்மூலம் அமைதிப் பேச்சுக்கு புலிகளை மீண்டும் இழுக்க முயன்றது.
ஆனால், தமிழர் பகுதிகளில் அரசியல் அதிகாரமும் சுயாட்சி அதிகாரமும் கொண்ட இடைக்கால நிர்வாகத்தைதங்கள் தலைமையில் அமைத்தால் மட்டுமே இனி பேச்சுவார்த்தை சாத்தியம் என்பதை தெள்ளத் தெளிவாக புலிகள்கூறியுள்ளனர்.
லண்டனில் இருந்து ஆண்டன் பாலசிங்கம், ரணில் விக்கிரமசிங்கேவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,
நிதிச் சுதந்திரம், மறுகட்டமைப்புக்கு ஒரு அமைப்பை ஏற்படுத்துவது ஆகிய உங்களின் அறிவிப்புகள் எங்களுக்குதிருப்தியைத் தரவில்லை. மாறாக ஏமாற்றத்தையே தந்துள்ளன. இதனால் அந்தத் திட்டத்தை ஏற்க முடியாது.
இடைக்கால நிர்வாகத்தை அமைக்க எங்கள் தலைவர் பிரபாரகன் கூறியுள்ள திட்டத்தை அமலாக்க நீங்கள் முன்வந்தால் தான் பேச்சு நடத்த நாங்கள் முன் வருவோம். எங்களது கோரிக்கையை நீங்கள் நல்லமுறையில்பரிசீலிப்பீர்கள் என்று நம்புகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து இலங்கை அரசின் அமைதிக் குழுத் தலைவர் ஜி.எல்.பெரிஸ் கூறுகையில், இடைக்கால நிர்வாகத்தைஅமைப்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. இது குறித்து இரு தரப்பினரும் பேச்சு நடத்தலாம்.
அதே நேரத்தில் இடைக்கால நிர்வாகம் என்பது இலங்கை அரசியல் சட்டத்துக்கு உட்பட்டதாகவே இருக்கவேண்டும். நாட்டின் சட்டத்துக்கு வெளியே எதையும் செய்ய முடியாது. புலிகளுக்கும் எங்களுக்கும் ஏற்பட்டுள்ளகருத்து வேறுபாடுகள் தீர்க்க முடியாத அளவுக்கு சிக்கலானவை அல்ல.
புலிகளின் இடைக்கால நிர்வாகக் கோரிக்கையையும் அதன் காரணத்தையும் அரசு நிச்சயமான உணர்ந்துள்ளது.ஆனால், இந்த நிர்வாகத்தை எப்படி அமைப்பது, எப்படி அழைப்பது என்பதில் தான் பிரச்சனை. வட கிழக்குமாகாணத்துக்கு மட்டும் ஒரு இடைக்கால நிர்வாகம் என்பது எங்களுக்கு ஏற்புடையதல்ல.
இப்போதும் கூட புலிகளுடன் அரசு தொடர்ந்து தொடர்பு வைத்துக்கொண்டு தான் உள்ளது. தமிழ் தேசியக்கூட்டணியில் உள்ள நடுநிலையாளர்கள் மூலம் நாங்கள் இருவருமே பேசிக் கொண்டு தான் இருக்கிறோம்.விரைவில் எங்களது நேரடிப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது என்றார்.
தமிழ் தேசியக் கூட்டணியைச் சேர்ந்த எம்.பியான சம்பந்தன் கூறுகையில், நாங்கள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கேயுடன் பேசி வருகிறோம். மீண்டும் பேச்சுவார்த்தையைத் துவக்க எல்லா முயற்சிகளும்மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந் நிலையில் தான் இலங்கைக்கான பிரிட்டன், சுவீடன், நெதர்லாந்து நாடுகளின் தூதர்கள் இன்று வட கிழக்குப்பகுதிக்குச் சென்று புலிகளின் அரசியல் பிரிவினரைச் சந்திக்க உள்ளனர்.
நார்வே மற்றும் ஐரோப்பிய யூனியனின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இவர்கள் புலிகளைச் சந்திக்கின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications