கட்டட இடிப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் ஸ்ரீதேவி வழக்கு
சென்னை:
ஆட்டம் கண்ட 8 மாடி கட்டடத்தின் மேல் 3 மாடிகளை சென்னை மாநகராட்சி இடிப்பதை எதிர்த்துநடிகை ஸ்ரீதேவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை, மயிலாப்பூர் சி.ஐ.டி.காலனி பகுதியில், ஸ்ரீதேவியும் சாந்தி பில்டர்ஸ் என்ற ரியல்எஸ்டேட் நிறுவனமும் இணைந்து 8 மாடி ஃபிளாட்டுகளை கட்டி விற்றுள்ளனர்.
4 மாடிகளே கட்ட அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கீகாரம் இல்லாமல் மேலும் மாடிகளை ஸ்ரீதேவிமற்றும் சாந்தி பில்டர்ஸ் நிறுவனத்தினர் கட்டினர்.
இந் நிலையில் அஸ்திவாரம் பளு தாங்காமல் ஆட்டம் கண்டது. முக்கிய தூண் ஒன்று இடிந்துவிழுந்தது. இதனால் கட்டடமே இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அனுமதியில்லாமல் கட்டப்பட்ட 3 மாடிகளை இடிக்க சென்னை மாநகராட்சிஉத்தரவிட்டது. ஆனால் கட்டடத்தை இடிக்க ஸ்ரீதேவி முன் வராததால் மாநகராட்சியே அதை இடித்துவருகிறது.
இந் நிலையில் இந்த இடிப்பை எதிர்த்து ஸ்ரீதேவி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டது.
கட்டடத்தின் இடிந்த தூண் பகுதியை சரி செய்யும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். ஆனால்,அதற்கும் கூட அவகாசம் தரப்படவில்லை.
சம்பந்தப்பட்ட கட்டடத்தை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் நேரில்பார்வையிட்டு ஆய்வு செய்திருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்யவில்லை. அவசரப்பட்டுகட்டடத்தை இடிக்கத் தொடங்கியுள்ளனர்.
எனவே இதற்கு உடனே இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று ஸ்ரீதேவி கோரியுள்ளார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications