100 அடி கிணற்றிலிருந்து 25 மணி நேர போராட்டத்துக்குப் பின் மீண்ட சிறுத்தை!
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே 100 அடி ஆழ கிணற்றில் விழுந்த சிறுத்தை 25 மணி நேரப் போராட்டத்திற்குப்பிறகு உயிடன் மீட்கப்பட்டது.
கோமதிபுரம் ஆர்.கொம்பை கிராமத்தை ஒட்டிய மலைப் பகுதிகளில் இருந்து ஒரு சிறுத்தை கிராமத்துக்குள்நுழைந்தது. வீட்டில் கட்டிப் போடப்பட்டிருந்த பசு மாட்டை அந்த சிறுத்தை தாக்கியது.
இதையடுத்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அந்த சிறுத்தையை விரட்டினர். அப்போது பழனியம்மாள்என்பவருக்குச் சொந்தமான 100 அடி ஆழ கிணற்றில் விழுந்தது. கிணற்றில் தண்ணீர் இருந்ததால்உயிருக்காக அது போராடிக் கொண்டிருந்தது.
தொடர்ந்து நீந்திக் கொண்டே உருமிய வண்ணம் அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருந்தது.இதையடுத்து கிணற்று நீர் மோட்டர்கள் மூலம் வெளியேற்றப்பட்டது.
இதையடுத்து பொள்ளாச்சியிலிருந்து வந்த கால்நடை டாக்டர்களும் வனத்துறையினரும்சிறுத்தையை மீட்கும் முயறசியில் இறங்கினர்.
அவர்கள் துப்பாக்கி மூலம் மயக்க ஊசியை சிறுத்தை மீது செலுத்தினார்கள். இதைத் தொடர்ந்துசிறுத்தை மயக்கமடைந்தது. அதன் பிறகு சிலர் கிணற்றுக்குள் இறங்கி சிறுத்தையை மேலே கொண்டுவந்தனர்.
அதன் பிறகு அந்த சிறுத்தை பொள்ளாச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு அதுமீண்டும் காட்டுக்குள் கொண்டு போய் விடப்படும். சுமார் 25 மணி நேரம் கிணற்றில் தத்தளித்தபிறகு தான் சிறுத்தை மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications