அழகிரி எழுதிய கடிதங்களை ஒப்படைக்க கருணாநிதிக்கு உத்தரவு
மதுரை:
தா.கிருட்டிணனுடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக கருணாநிதிக்கு அழகிரி அனுப்பிய கடிதங்கள், அதற்கு அவர்எழுதிய பதில் கடிதங்கள் ஆகியவற்றை மதுரை நீதிமன்றத்தில் ஒப்படைக்கக் கோரி திமுக தலைவர் கருணாநிதிக்குசம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தா.கிருட்டிணன் படுகொலை தொடர்பாக அழகிரி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் 2 நாள் போலீஸ்விசாரணை நடந்தது. தற்போது அழகிரி வீட்டில் சோதனை நிடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
தா.கிருட்டிணனுடன் இருந்த பூசல் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதிக்கு அழகிரி பலமுறை கடிதம்எழுதியுள்ளார். அதற்கு கருணாநிதியும் பதில் அனுப்பியுள்ளார். இவற்றில் சில கடிதங்கள் போலீசாரிடம்சிக்கியுள்ளன.
ஆனால், அவற்றில் வழக்குக்கு சாதகமாக இருக்கும் கடிதங்களை மட்டும் நீதிமன்றம் போலீசார்சமர்பித்துள்ளதாகவும் தா.கி-அழகிரி இடையே பூசல் ஏதும் இல்லை என்பதை விளக்கும் கடிதத்தை போலீசார்மறைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டிய கருணாநிதி அந்தக் கடிதத்தை பத்திரிக்கைகளுக்கு வெளியிட்டார்.
இதையடுத்து கருணாநிதிக்கு அழகிரி அனுப்பிய கடிதங்களை மதுரை நீதிமன்றத்தில் ஒப்படைக்கக் கோரிநீதிமன்றம் கருணாநிதிக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
இந்தச் சம்மனை திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி பெற்றுக் கொண்டார். நீதிமன்றம் கோரியுள்ள கடிதங்கள்ஏற்கனவே மதுரை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக திமுக தரப்பில் பதில் அனுப்பட்டுள்ளது.
தற்போது அழகிரியின் வீட்டில் உள்ள கடிதங்களை கைப்பற்றுவதற்காக மதுரை 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில்போலீசார் மனு செய்துள்ளனர். அதில் அழகிரி வீட்டில் சோதனை நடத்த அனுமதி தருமாறு கோரியுள்ளனர்.
தற்போது அழகிரி குடும்பத்தினர் மதுரையில் இல்லை, பாதுகாப்புக்காக சென்னை கோபாலபுரத்தில் உள்ளகருணாநிதி வீட்டில் தங்கி உள்ளனர். வீட்டில் சோதனை நடத்த அனுமதி கிடைத்தவுடன் அழகிரி குடும்பத்தினர்மதுரை விரைவார்கள் என்று கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications