தமிழகத்தில் சினிமா சூட்டிங் நடத்த கட்டணம் கிடுகிடு உயர்வு!!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Rajaji Hallதமிழக அரசின் தலைமைச் செயலகம், உயர் நீதிமன்றம், விசாரணைக் கமிஷன் தலைமையகம். இப்படி தமிழ்சினிமாவில் பல உருவங்கள் எடுத்து, முக்கிய இடம் பெற்றது ராஜாஜி ஹால்.

சென்னையில் உள்ள இந்த ராஜாஜி ஹாலில் படப்பிடிப்பு நடத்த இதுவரை ரூ. 10,000 மட்டுமே கட்டணமாகவசூலிக்கப்பட்டு வந்தது. இப்போது இதன் கட்டணத்தை தடாலடியாக ரூ. 1 லட்சமாக உயர்த்தியுள்ளது தமிழகஅரசு.

அதே போல வள்ளுவர் கோட்டம், அரசு மருத்துவமனைகள், மெரீனா பீச், அண்ணா சாலை உள்ளிட்ட முக்கியசாலைகள், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள், அரசுக் கல்லூரி வளாகங்கள் ஆகியவற்றில்படப்பிடிப்பு நடத்துவதற்கான கட்டணமும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கு தமிழ் திரையுலகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ராஜாஜி ஹால் மண்டபத்தில் படப்பிடிப்புநடத்த இனி ரூ 1 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் (தற்போதைய கட்டணம் ரூ. 10,000).

அதேபோல வள்ளுவர் கோட்டம், மருத்துவமனைகள், கல்லூகள், ஊட்டி, கொடைக்கானல் ஆகிய இடங்களில்படப்பிடிப்பு நடத்த தற்போதுள்ள ரூ. 2,000 கட்டணம் ரூ. 50,000மாக அதிகரிக்கப்படுகிறது.

கடற்கரைகள், நெடுஞ்சாலைகள் ஆகியவற்றில் படப்பிடிப்பு நடத்த தற்போதுள்ள ரூ. 1,000 கட்டணம், ரூ. 25,000ஆக அதிகரிக்கப்படுகிறது என்று அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் அறிவிப்பு தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டண உயர்வுதிரையுலகை கடுமையாக பாதிக்கும் என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் மோகன் சர்மாகூறியுள்ளார்.

Valluvar Kottamஇதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ் திரையுலகம் கடும் பொருளாதாரநெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. திருட்டு விசிடி, தனியார் சேட்டிலைட் டிவிக்களின் ஆதிக்கத்தால்திரையுலகம் தடுமாறிக் கொண்டுள்ள நிலையில் இந்த கட்டண உயர்வு திரையுலகை மேலும் கடுமையாக பாதிக்கும்.

சிறிய பட்ஜெட் தயாரிப்பாளர்கள் இந்தக் கட்டண உயர்வை தாங்க முடியாது. எனவே படப்பிடிப்பு அனுமதிக்கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

உண்மையில் சொன்னால் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து செட் போட்டு வரும் தயாரிப்பாளர்கள் அரசுக்குபணம் செலுத்த வேண்டும் என்றால் மட்டும் மூக்கால் அழுவது ஏன் எனறு தெரியவில்லை.

பூவெல்லாம் உன் வாசம் படத்துக்கு இரு வீடுகளை செட் போட ரூ. 2 கோடி செலவு செய்தார் தயாரிப்பாளர்ரவிச்சந்திரன். அதே போல விஜய்யின் படங்கள் பெரும்பாலும் செட்களில் தான் எடுக்கப்பட்டு வருகின்றன.இதற்கு அவர்கள் செலவிடும் தொகை பல கோடிகளாகும்.

மேலும் பாட்டு சீன் என்றால் சுவிஸ், கனடா, நியூசிலாந்துக்குப் பறக்கும் இவர்கள் அந் நாட்டில் மட்டும் கேட்கும்தொகையைக் கட்டணமாக செலுத்துகின்றனர். ஆனால், விரிந்து பறந்த மெரீன கடற்கரையை வெறும் ரூ. 1,000மட்டும் கொடுத்து இத்தனை நாட்களாக அனுபவித்து வந்துள்ளனர் சினிமாகாரர்கள்.

இனி கமிஷ்னர் விஜய்காந்த் போலீஸ் யூனிபார்மில் தலைமைச் செயலகத்தில் (ராஜாஜி ஹால்) நுழைந்துஅமைச்சர் மன்சூர் அலிகானை அடிக்கப் போக வேண்டுமென்றால் தமிழக செய்தி-விளம்பரத்துறைக்கு ரூ. 1லட்சம் கட்ட வேண்டும்!!!

Mail this to a friend  Post your feedback  Print this page 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+