கந்து வட்டிக்கு வெடி: வருகிறது கடுமையான சட்டம்
சென்னை:
தமிழகத்தில் ஏழைகளின் பணத்தையும், அவர்களது மானத்தையும் பறித்து வரும் கத்து வட்டிக் கும்பல்களைஒழிக்க கடும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கந்து வட்டிக் காரர்களை 3 ஆண்டு வரை சிறையில் தள்ளும்வகையில் இச் சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்ட மசோதாவுக்கு நேற்றிரவு ஆளுநர் ராம்மோகன் ராவ் அனுமதியளித்தார்.
தமிழகத்தின பல பகுதிகளிலும் அந்ததந்தப் பகுதியில் ஜாதிரீதியில் பலம் வாய்ந்த கும்பல்கள் தான் இந்தக்கந்துவட்டித் தொழிலை நடத்தி வருகின்றன. அரசியல்வாதிகளின் பினாமிகள், பண முதலைகள், காண்ட்ராக்டர்கள்,கள்ளச் சாராயம் மூலம் பணம் குவித்துள்ள கும்பல்கள், போலீஸ்காரர்களின் பினாமிகள் ஆகியோர் தான் இந்தக்கந்துவட்டித் தொழிலில் உள்ள முக்கியமான நபர்களாவர்.
ரூ. 100 கடன் வாங்கியவர்களை காலம் முழுவதும் தினமும் ரூ. 10 வட்டி கட்ட வைப்பது, ரன் வட்டி, அவர் வட்டி,மீட்டர் வட்டி, நாள் வட்டி, வார வட்டி, மாத வட்டி என்று பல பெயர்களில் வட்டி வசூலிப்பது இந்தக் கந்துவட்டியின் ஸ்பெஷாலிட்டி. 360 சதவீதம் வரை வட்டி வசூலிக்கும்கும்பல்களும் உண்டாம்.
மேலும் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பெயரில் வசூலிக்கப்படும் இந்த வட்டியால் வாழ்விழந்து,இவர்களிடம் மானத்தையும் இழந்து வரும் ஏழைகள் லட்சக்கணக்கில் உள்ளனர். வட்டி கட்ட முடியாதவர்களின்வீட்டுக்குள் குடித்துவிட்டு நுழைவது, வீட்டுப் பெண்களிடம் முறைகேடு செய்வது மதுரைப் பக்கம்சர்வசாதாரணமான நிகழ்வுகள்.
கந்து வட்டிக் கொடுமையால் எத்தனையோ பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர், குடும்பத்தைஇழந்துள்ளனர், சொத்துக்களை பறிகொடுத்துள்ளனர்.
இப்போது இந்தக் கந்து வட்டிக் கொடுமைக்கு முடிவு கட்ட புதிய சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளதுதமிழக அரசு.
கடன் கொடுப்பது தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்து இச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் இனிகந்து வட்டிக்காரர்கள் மீது போலீசாரால் நடவடிக்கை எடுக்க முடியும். இதுவரை அவர்களுக்கு இந்த அதிகாரம்இல்லாமல் இருந்தது.
கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே ஆளுநர் உரையில் கந்து வட்டிக் கொடுமைக்கு விரைவில் முடிவுகட்டப்படும் என்று அரசு உறுதி கூறியிருந்தது.
தற்போதுள்ள சட்டப்படி வருவாய் துறையினரும், தாசில்தார்களும் மட்டுமே வட்டிக்காரர்கள் மீது நடவடிக்கைஎடுக்க முடியும், போலீஸாருக்கு அதிகாரம் இல்லை. புதிய சட்டத் திருத்தப்படி போலீஸாரும் நடவடிக்கை எடுக்கமுடியும்.
-->-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications