தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை ஆரம்பம்: சென்னையில் வெப்பம் தணிகிறது
திருநெல்வேலி:
கேரளாவில் தென் மேற்கு பருவ மழை பெய்யத் தொடங்கியிருப்பதால் தமிழகத்திலும் வெப்பம் குறையஆரம்பித்துள்ளது. கேரளாவைத் தொடர்ந்து மதுரை, சிட்டம்பட்டி, நிலக்கோட்டை, விருதுநகர் ஆகிய பகுதிகளில்நேற்றிரவில் இருந்து மழை பெய்து வருகிறது.
மேலும், திருச்சி, தஞ்சாவூரின் காவிரி டெல்டாப் பகுதிகளிலும் ஓரளவு மழை பெய்துள்ளது. இதனால் காவிரிப்பாசனப் பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கேரளத்தில் தென் மேற்குப் பருவ மழை ஆரம்பித்ததையடுத்து கன்னியாகுமரி, நெல்லை மாவட்ட விவசாயிகள்பயிரிடும் வேலைகளையும் தொடங்கி விட்டனர்.
தென் மேற்கு பருவ மழை தாமதம் ஆனதால் நெல்லை, குமரி மாவட்டங்ளின் விவசாயிகள் தான் கடும்பாதிப்படைந்திருந்தனர். கேரளாவில் மழை பெய்ய ஆரம்பித்தால்தான், நெல்லையிலும் மழை பெய்யும்.
இந் நிலையில் ஒரு வாரம் கால தாமதமான பருவ மழை நேற்று முதல் கேரளத்தில் மழை பெய்யத்தொடங்கியிருப்பதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். கார் கால பயிர்களைப் பயிரிடஆரம்பித்துள்ளனர்.
இன்னும் சில தினங்களில் நெல்லையிலும் நல்ல மழை பெய்யத் தொடங்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடும் கோடை காரணமாக நெல்லை மாவட்டத்திலுள்ள 3,000 ஏரிகள் காய்ந்து போய்க் கிடக்கின்றன என்பதுகுறிப்பிடத்தக்கது.
அப்பாடா, வெயில் குறைஞ்சு போச்சு!
இந்த மழை காரணமாக தமிழகத்திலும் வெப்பத்தின் அளவு குறைய ஆரம்பித்துள்ளது. சென்னையிலும் வெப்பம்கொஞ்சம் தணிந்துள்ளது. நேற்று 41.1 டிகிரியாக இருந்த வெப்பம் இன்று 38.7 டிகிரியாகக் குறைந்துவிட்டது.
கேரளத்தில் மழை வலுக்கும்போது, அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன்கூடிய மளைழ பெய்யலாம் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications