ரம்யா கிருஷ்ணன் திடீர் திருமணம்

Subscribe to Oneindia Tamil

ஒரு வழியாய் தனது நீண்டகால பாய் பிரண்டான தெலுங்கு டைரக்டர் கிருஷ்ணவம்சியை மணந்தார் ரம்யாகிருஷ்ணன். இன்று காலை ஹைதராபாத்தில் இந்தத் திடீர் திருமணம் நடந்தது.

மிக நெருங்கிய நண்பர்கள், உறவினர்களை மட்டும் அழைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.திருமணச் செய்தி குறித்துக் கேள்விப்பட்டு விரைந்த பத்திரிக்கையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

தமிழகத்தைச் சேர்ந்த ரம்யா கிருஷ்ணன் தமிழில் தான் முதலில் அறிமுகமானார். ஆனால், இங்கு அதிகமானவாய்ப்புக்கள் கிடைக்காததால் தெலுங்குக்குச் சென்றார். அங்கு முன்னணி ஹீரோயினாக சில காலம் வலம் வந்தார்.இப்போதும் தனது வயதையும் மீறிய கட்டழகுடன் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

ரஜினியின் படையப்பாவில் நீலாம்பரியாக வந்து ரஜினிக்கு இணையாகப் பேசப்பட்டார். இதன் பின்னர் தமிழில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த இவருக்கு பஞ்சதந்திரத்தில் முக்கிய ரோல் கொடுத்தார் கமல்.அதில் அட்டகாசமாக நடித்திருந்தார்.

இப்போது தான் தமிழில் சரத்குமாருடன் பாறை படத்தில் நடித்து முடித்தார். எஸ்கார்ட் லேடி என்ற படத்தில் ஒருபாட்டுக்கு டான்ஸ் ஆட அட்வான்ஸ் வாங்கியுள்ளார்.

இந் நிலையில் சமீபகாலமாகவே இவரது திருமண பேச்சுக்கள் சூடு பிடித்திருந்தன. வீட்டில் இவருக்கு வேறுமாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். ஆனால், நெடுங்காலமாகவே கிருஷ்ணவம்சியுடன் திருமணம்செய்யாமலேயே சேர்ந்து வாழ்ந்து வந்த ரம்யா கிருஷ்ணன் அவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தெலுங்கில் குலாபி, அனந்தபுரம், இந்தியில் சக்தி போன்ற படங்களை இயக்கிய கிருஷ்ணவம்சி, ரம்யாவை வைத்துசந்திரலேகா என்ற படத்தை எடுத்தார்.

அப்போது தான் இருவருக்கும் காதல் அரும்பியது. இருவரும் சேர்ந்தே வாழ ஆரம்பித்தனர். ஆனால், இருவரும்அடிக்கடி சண்டைபோட்டுப் பிரிவதும் வழக்கமாக இருந்தது. இப்போது தங்களது நீண்ட காலக் காதலைதிருமணத்தில் முடித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+