காலமெலாம் காதல் வாழ்க: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சிறைவாசம் என்பது எங்களது குடும்பத்திற்கு தொட்டில் பழக்கம். மு.க.ஸ்டாலினின் கொள்ளுப் பாட்டியேசிறைக்குச் சென்றவர்தான். எனவே சிறைவாசம் எங்களை பயமுறுத்தாது, மாறாக பண்படுத்தும் என்று திமுகதலைவர் கருணாநிதி கூறினார்.

அழகிரியின் சிறைவாசத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு பேசினார்.

கருணாநிதியின் மைத்துணர் தட்சிணாமூர்த்தியின் பேத்தி அன்புக்கொடிக்கும், சிவசங்கர பாரதிக்கும் சென்னையில்திருமணம் நடந்தது. அந் நிகழ்ச்சியில் கருணாநிதி பேசியதாவது:

எனது பெயரும் தட்சிணாமூர்த்திதான். பின்னர் அதை கருணாநிதி என்று மாற்றிக் கொண்டேன். எனது நண்பர்தென்னன், அவரது பெயரும் தட்சிணாமூர்த்திதான். நான்தான் தென்னன் என்று மாற்றினேன். எனவே இங்குஇப்போது 3 தட்சிணாமூர்த்திகள் இருக்கிறோம்.

எனது மனைவி தயாளு அம்மாளின் பாட்டியார், அதாவது ஸ்டாலினின் கொள்ளுப்பாட்டி ராஜாமணி அம்மையார்திராவிட பாரம்பரியத்தில் வந்தவர். ராமாமிர்த அம்மையாரின் வழிகாட்டலின் பேரில், இந்தி எதிர்ப்புப் போரில்ஈடுபட்டு சிறை சென்றவர். சென்னையில் 3 மாதம் சிறைவாசம் அனுபவித்தவர்.

அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, அந்தணர் மந்திரம் ஓதி நடந்த திருமணங்கள் எந்த நிலையில் இருக்கின்றனஎன்பதை போய்ப் பார்த்தால்தான் தெரியும். அதனால் தான் கலப்புத் திருமணம், காதல் திருமணம் என்றால் நான்கண்களை மூடிக் கொண்டு சம்மதம் தெரிவித்து வருகிறேன்.

இங்கு இப்போது நடப்பதும் உடையார், இசை வேளாளர் சாதியினருக்கு இடையிலான கலப்புத் திருமணம் தான்.காதல் திருமணத்துக்கும், கலப்புத் திருமணத்துக்கும் உதாரணம் வேண்டுமென்றால் எங்கும் தேடி அலையவேண்டியதில்லை. என் வீட்டுக்கு வந்தாலே போதும்.

காதலிலும் கலப்புத் திருமணத்திலும் வெற்றி பெற்றவர்கள் என் பிள்ளைகள். ஆனால் இதுபோன்ற சீர்திருத்ததிருமணங்களை ஏற்கும் மனப்பக்குவம் பலரிடம் இல்லை என்பதுதான் வருத்தம் தருகிறது என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+