போதையில் காவல் நிலையத்தில் புகுந்து கலாட்டா செய்த போலீஸ்காரர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

குடிபோதையில் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து சப்-இன்ஸ்பெக்டர், தலைமைக் காவலர் (ஏட்டு) ஆகியோரைசரமாரியாக கெட்ட வார்த்தைகளால் திட்டியதோடு, ரகளையிலும் ஈடுபட்ட காவலர் கைது செய்யப்பட்டார்.

சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர் சிவாஜி. இவர் சில மாதங்ளுக்கு முன்பு தான்முகப்பேர் மேற்கு காவல் நிலையத்தில் இருந்து மாற்றலாகி திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு வந்தார்.

இந் நிலையில் குடித்துவீட்டு முகப்பேர் காவல் நிலையத்திற்குச் சென்றார்.

எனது சைக்கிளைக் காணவில்லை என்று புகார் கொடுத்து பல மாதங்களாகி விட்டது. அதை சைக்கிளைக்கண்டுபிடித்தீர்களா, இல்லையா என்று அங்கிருந்த போலீசாரிடம் கேட்டுள்ளார்.

பின்னர் சப்-இன்ஸ்பெக்டர், தலைமைக் காவலர் ஆகியோரிடம் போய் டேய், நீயெல்லாம் போலீசா என்றுஆரம்பித்து வாய்க்கு வந்தபடி பேசினார். அவர் பொழிந்த வார்த்தைகளால் காவல் நிலயைமே நாறியது.

இதையடுத்து சிவாஜி குறித்து மேல் அதிகாகளுக்கு சப்-இன்ஸ்பெக்டர் தகவல் கொடுத்தார். உடனே அவரைப்பிடித்து உள்ளே போடுமாறு உத்தரவு வந்தது. இதையடுத்து காவலர் சிவாஜி கைது செய்யப்பட்டார்.

அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+