தர்மபுரி அருகே வாந்தி, பேதியால் நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு: மருத்துவக் குழுக்கள் விரைந்தன
தர்மபுரி:
தர்மபுரி அருகே 33 கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் வாந்தி, பேதியால்பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்த கிராமங்களுக்கு மருத்துவக் குழுக்கள் விரைந்துள்ளனர்.
இந்த 33 கிராமங்களுக்கும் செல்லும் குடிநீர் மாசுபட்டுள்ளதாகத் தெரிகிறது.தென்பென்னையாற்றில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் நீரேற்று நிலையத்தில் தண்ணீர்மாசுபட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள்தெரிவிக்கின்றனர்.
இதனால் நேற்றிலிருந்து இந்தக் கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்களுக்கு வாந்தியும்பேதியும் ஏற்பட்டுள்ளது.
பலர் வீடுகளிலேயே மயக்கமடைந்தனர். இவர்கள் அனைவரும் கூட்டம், கூட்டமாக தர்மபுரி அரசுமருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டனர். இவர்களை மருத்துவனைகளுக்குக் கொண்டு வரஆம்புலன்ஸ்களும் கார்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு மருத்துவக் குழுக்களும் விரைந்துள்ளன.
சம்பவம் குறித்து நேரில் விசாரிக்கவும், மருத்துவ நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தவும்,பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய உதவிகள் அளிக்கவும் அமைச்சர்கள் அன்பழகன், தாமோதரன்ஆகியோர் அங்கு விரைந்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications