பிரயாக் மடாதிபதிக்கு காஞ்சி சங்கராரியார் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

அயோத்திப் பிரச்சினை தொடர்பாக காஞ்சி மடம், மத்திய அரசு, இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள்இடையே மட்டும் பேச்சுவார்த்தை நடக்க வேண்டும். அப்படி நடந்தால், இரண்டே மாதங்களில் பிரச்சினையைத்தீர்த்து விடலாம் என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் கூறியுள்ளார்.

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அயோத்திப் பிரச்சினையில் பலரும்தலையிட்டுள்ளதால்தான் குழப்ப நிலை நீடிக்கிறது. காஞ்சி மடம், மத்திய அரசு, இஸ்லாமிய தலைவர்கள் இவர்கள்மட்டுமே பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அப்படி ஈடுபட்டால்தான் இப்பிரச்சினையில் முழுமையானதீர்வை எட்ட முடியும்.

கடந்த ஆண்டு இதே போலத்தான் பேச்சுவார்த்தை நடந்தது. 99 சதவீத அளவுக்கு தீர்வை எட்டினோம். ஆனால்கடைசி நேரத்தில் சில அரசியல் கட்சிகள் புகுந்து குழப்பம் விளைவித்ததால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

அயோத்திப் பிரச்சினையில் சம்பந்தம் உள்ளவர்கள் (சிருங்கேரி மடம், துவாரகா மடம், பூரி மடம்) ஆகியோர்அமைதியாக உள்ளனர். ஆனால் இந்தப் பிரச்சினையில் சற்றும் சம்பந்தமே இல்லாத பிரயாக் மடாதிபதி தவறானதகவல்களையே பரப்பி வருகிறார்.

வட மாநிலங்களில் சிலவற்றில் தேர்தல் வருவதையொட்டியே அயோத்திப் பிரச்சினை மீண்டும் எழுப்பப்பட்டுவருவதாகக் கூற முடியாது. காஞ்சி மடத்திற்கும், அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை.

ஜூன் 19ம் தேதி குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் காஞ்சிபுரம் வருகிறார். சந்திரசேகரேந்திர விஸ்வ மகாவித்யாலயா கல்வி நிலையத்தில் முதுநிலைப் படிப்பை அவர் தொடங்கி வைக்கிறார் என்றார் ஜெயேந்திரர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+