ஈபிஆர்எல்எப் தலைவர் கொலை: புலிகள் கப்பல் தகர்ப்பு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் ஈ.பி.ஆர்.எல்.எப்பைச் (வரதராஜ பெருமாள் அணி) சேர்ந்த முக்கிய தமிழ் அரசியல் தலைவர்களில்ஒருவரான சுபத்ரன் (வயது 44) இன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதே நேரத்தில் சர்வதேச கடல் எல்லையில் புலிகளின் படகை கடற்படைத் தடுத்தபோது அதை புலிகள் தகர்த்தனர்.இதில் 12 புலிகள் வரை பலியாகி இருக்கலாம் என்று தெரிகிறது.

சுபர்தனின் கொலை இன்று காலை யாழ்பாணத்தில் நடந்தது. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்முக்கியத் தலைவராக இருந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புலிகள் இயக்கத்தை இந்த அமைப்பு மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறது. புலிகளுக்குப் பயந்து தான் இந்தஇயக்கத்தின் முன்னணித் தலைவரும், முன்னாள் வட-கிழக்கு மாகாண முதல்வருமான வரதராஜ பெருமாள்இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ந்தது.

இந் நிலையில் சுபத்ரன் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை அடையாளம் தெரியாத சிலர் சுட்டுக்கொன்றுவிட்டுத் தப்பினர்.

புலிகளின் கப்பல் தகர்ப்பு:

அதே நேரத்தில் வட-கிழக்குப் பிராந்திய கடல் பகுதியில் இன்று புலிகளின் சரக்குக் கப்பலை ஒரு சிறிய படகுஇழுத்துச் சென்று கொண்டிருந்தது.

அப்போது இலங்கைக் கடற்படை கப்பலைத் தடுத்து நிறுத்தியது. இதையடுத்து இரு தரப்பினருக்கும் துப்பாக்கிச்சண்டை ஏற்பட்டது. இறுதியில் அந்தக் கப்பலில் இருந்த சில புலிகள் அதிலிருந்து வெளியேறி படகில் தப்பினர்.

இதைத் தொடர்ந்து கடற்படையினர் அந்தப் கப்பலுக்கு செல்வதற்காக அருகே வந்தனர். ஆனால், அதற்குமுன்னதாகவே அந்தக் கப்பலை புலிகளை வெடிக்கச் செய்துவிட்டனர். இதனால் கடற்படையினரால் அந்தப்கப்பலைக் கைப்பற்ற முடியவில்லை.

கப்பல் வெடித்துச் சிதறியபோது அதில் 12 விடுதலைப் புலிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்கள்காப்பாற்றப்பட்டுவிட்டார்களா அல்லது பலியாகிவிட்டார்களா என்று தெரியவில்லை.

இத் தகவலை இலங்கை பாதுகாப்புத்துறைச் செயலாளர் ஆஸ்டின் பெர்னாண்டோ கொழும்பில் நிருபர்களிடம்தெரிவித்தார். இது தொடர்பாக நார்வே அமைதிக் குழுவினரிடமும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

ஆனால், சர்வதேச கடல் எல்லையில் உணவுப் பொருள்களை ஏற்றி வந்த தங்களது கப்பலை இலங்கை ராணுவம்தான் தாக்கி நீரில் மூழ்கடித்ததாக புலிகள் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.

புலிகளின் படகுகளையும் கப்பல்களையும் கடற்படை அடிக்கடி தடுத்து நிறுத்தித் தொல்லை தருவதால்அவர்களுடன் மோத வேண்டிய நிலைக்குத் தாங்கள் தள்ளப்பட்டு வருவதாக புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர்தமிழ்செல்வன் நேற்று தான் எச்சரித்திருந்தார். இந் நிலையில் இன்று இச் சம்பவம் நடந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+