பயங்கர விபத்திலிருந்து தப்பிய நெல்லை எக்ஸ்பிரஸ்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
திருநெல்வேலியிலிருந்து சென்னை நோக்கி வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில், மதுரை அருகே ஏற்படவிருந்தபயங்கர விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாகத் தப்பியது.
வேகமாக ரயில் வந்ததால் இரும்புக் குழாய்கள் உடைந்து நொறுங்கின. இருப்பினும், ரயில் பயங்கர சத்தத்துடன்அல்லாடியது. இதனால் பயணிகள் பயத்தில் அலறினர்.
தண்டவாளத்தில் இரும்புக் குழாய்களைப் பார்த்தவுடன் டிரைவர் சடன் பிரேக் போட்டார். ஆனால் அதன் மீது ஏறி,இறங்கி ஒரு கிலோமீட்டர் தூரம் சென்று தான் ரயில் நின்றது.
ரயில் லேசாக நிலை தடுமாறியிருந்தாலும், பெரும் விபத்து ஏற்பட்டிருக்கக் கூடும் என்று ரயில்வே அதிகாரிகள்பதற்றத்துடன் தெரிவிக்கின்றனர்.
இரும்புக் குழாய்கள் எப்படி தண்டவாளத்தில் வந்தன என்று தெரியவில்லை. இது சதி வேலையா என்று போலீஸார்விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications