சங்கராச்சாரியாருக்கு உள்ள உரிமை போப்பாண்டவருக்கும் உண்டு: திருமாவளவன்
திருச்சி:
இந்துக்களுக்காகக் கருத்துக் கூற மடாதிபதிகளுக்கு எப்படி உரிமை இருக்கிறதோ, அதே போல கிருஸ்தவர்கள்பாதிக்கப்படும்போது அதைப் பற்றி கருத்துத் தெரிவிக்க போப்பாண்டவருக்கு அதிகாரமும், தகுதியும் உள்ளதுஎன்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
மதமாற்றத் தடைச் சட்டத்தை ஆதரிக்க காஞ்சி சங்கராச்சாரியாருக்கும், இந்து துறவிகளுக்கும்எந்தளவுக்கு உரிமை உள்ளதோ, அதே அளவுக்கு அதை விமர்சிக்க போப் ஆண்டவருக்கும்உரிமை உள்ளது.
கோடானு கோடி கிறிஸ்தவ மக்கள் தங்கள் தலைவராக போப்பாண்டவரை ஏற்றுக் கொண்டுள்ளனர்.தன்னை நம்பும் மக்களின் நலன் குறித்து அக்கறைப்படுவது, மதத் தலைவர் என்ற முறையில் அவரதுஉரிமை. தனது மதத்திற்கு எதிரான ஒரு சட்டம் குறித்து கருத்து கூற போப் ஆண்டவருக்கு முழுஉரிமை உள்ளது.
கிருஸ்தவ மக்களின் மனம் புண்படும்படியாக போப் ஆண்டவரை ஜெயலலிதா விமர்சிப்பதுஆரோக்கியமானது அல்ல. அவரைக் குறை சொல்லும் அளவுக்கு ஜெயலலிதாவுக்கு தகுதியும் இல்லை.
சண்டியருக்கு எதிர்ப்பு:
சாதிகளின் பெயரிலும், சாதிகளை மையப்படுத்தியும் திரைப்படங்கள் எடுக்கப்படுவதை தடை செய்ய வேண்டும். இதுபோன்றபடங்களினால் பல்வேறு பிரச்சினைகள் உருவாக வாய்ப்புண்டு. அதேபோல, தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பதையும்தடை செய்ய வேண்டும் என்றார்.
பேராயர்கள் கண்டனம்:
போப்பாண்டவருக்கு எதிராக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்த கருத்துக்களுக்கு கிருஸ்தவர்கள் மத்தியில் கடும்கண்டனம் எழுந்துள்ளது. மயிலாப்பூர் மறை மாவட்டப் பேராயர் லாரன்ஸ் பயஸ் கூறுகையில்,
முதல்வரின் பேச்சு அதிர்ச்சி தருகிறது. மதமாற்றத் தடைச் சட்டம் குறித்து போப்பாண்டவர் எந்தக் கடுமையானவிமர்சனத்தையும் செய்யவில்லை. யாரையும் விமர்சிப்பவர் அல்ல போப். இந்தச் சட்டத்தால் மத உரிமைகள்பறிக்கப்படுமோ என்ற தனது அச்சத்தைத் தான் தெரிவித்திருந்தார்.
அப்படிப்பட்டவரைப் போய் முதல்வர் இவ்வாறு விமர்சனம் செய்திருப்பது மிகவும் வருத்தமான விஷயம் என்றார்.
பேராயர் வின்சென்ட் கூறுகையில், மதமாற்றத் தடைச் சட்டம் பேச போப்பாண்டவருக்கு எப்படி உரிமையில்லாமல்போகும். சர்வதேச அளவில் மிகப் பெரிய மதத்தின் மிகப் பெரிய தலைவர் எப்படி மதம் தொடர்பான சட்டம்குறித்து கருத்துத் தெரிவிக்காமல் இருக்க முடியும்.
அவருக்கு முழு உரிமையும் தகுதியும் உண்டு. அவருக்குத் தகுயில்லை என்று சொல்ல ஜெயலலிதாவுக்குத் தான்எந்தத் தகுதியும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications