சென்னை பள்ளி மாணவன் தற்கொலை: கணித ஆசிரியர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தனது பிறந்த நாளையொட்டி ஸ்பெஷல் கிளாசுக்கு வராத மாணவனை அடித்து, உதைத்து அவனதுதற்கொலைக்குக் காரணமாக இருந்த கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அடுத்த நாள் பள்ளிக்குச் சென்றபோது சிறப்பு வகுப்புக்கு ஏன் வரவில்லை என்று கூறி ஆசியர்கள் திட்டி அடித்து,உதைத்தனர்.
இதனால் மனம் உடைந்த மாணவன் அபினவ், திருமங்கலத்தில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.
பிறந்தநாள் கொண்டாடியது குற்றமா என்று அபினவின் பெற்றோர் கதறி அழுதது உறவினர்களையும், பொதுமக்களையும் கண்ணீர் விட வைத்தது.
இந் நிலையில் மாணவனை சாவுக்குத் தூண்டுதலாக இருந்ததாக வேலம்மாள் பள்ளி கணித ஆசியர் கண்ணப்பன்கைது செய்யப்பட்டுள்ளார். தங்களது மகன் சாவு தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்கொடுக்கப் போவதாகவும் அபினவின் பெற்றோ தெவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications