சோனியாவை விமர்சிக்க ஜெவுக்கு தகுதி உணடா?: இளங்கோவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

2 முறை காங்கிரஸ் கட்சியின் தயவால் ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதாவுக்கு, காங்கிரஸ்கட்சியையும், சோனியா காந்தியையும் விமர்சிக்க தகுதியும், அருகதையும் இல்லை என்று காங்கிரஸ்செயல் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தனது ஆட்சியின் நிர்வாக சீர்கேடுகளைமறைக்க அவ்வப்போது, சோனியா காந்தியையும், காங்கிரஸ் கட்சியையும் விமர்சிப்பதுஜெயலலிதாவுக்கு வழக்கமாகி விட்டது.

ராஜீவ் காந்தியின் உதிரத்தால் முதல் முறையும், சோனியா காந்தியின் கூட்டணியால்இரண்டாவது முறையும் ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதா, சோனியா காந்தியைப் பற்றி விமர்சிக்ககொஞ்சம் கூட தகுதியோ, அருகதையோ இல்லாதவர்.

கட்டாய மதமாற்ற தடுப்புச் சட்டம் தொடர்பாக போப் ஆண்டவர் கூறிய கருத்துக்களைவிமர்சித்ததோடு, கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களின் மனம் புண்படும்படியாக, போப்பாண்டவரைகண்டித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக கல்விஅமைச்சரின் உதவியாளர் மூலம் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கப்படுகிறது. இது போன்றஅவலங்களை உடனே ஜெயலலிதா தடுக்க வேண்டும்.இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்குத்தொடருவோம் என்றார் அவர்.

வீண் பேச்சு பேசுகிறார் ஜெ: வாசன்

சோனியா காந்தியை முதல்வர் ஜெயலலிதா விமர்சித்துள்ளதற்கு காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியச் செயலாளர் ஜி.கே. வாசனும்கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், சோனியா காந்தியை மக்களும் கோடிக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும் தலைவராகஏற்றுக் கொண்டுவிட்டனர். அவரது தலைமையில் தான் இன்று 14ம் மேற்பட்ட மாநிலங்களில் காங்கிரஸ் வென்று ஆட்சியைநடத்திக் கொண்டுள்ளது.

இந் நிலையில் அவரை வெளிநாட்டுக் காரர் என்றும் அவரை பிரதமராக விடமாட்டோம் என்றும் ஜெயலலிதா வீம்பு பேசிவருகிறார். ஜெயலலிதாவின் இந்த வீண் பேச்சை யாரும் ஆதரிக்கப் போவதில்லை.

எல்லா விதத்திலும் பின் தங்கிப் போயுள்ள தமிழகத்தை முதலில் முன்னேற்றுவதற்கான வேலைகளில் ஜெயலலிதா ஈடுபட வேண்டு.அதைவிட்டுவிட்டு வெட்டி அரசியல் நடத்தக் கூடாது.

தனது பதவிக்குக்குரிய லட்சணத்துடன் முதலில் ஜெயலலிதா பேசத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+