சென்னையில் காய்கறிகள் விலை கிடு கிடு உயர்வு!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை நகரில் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும்அவதியடைந்துள்ளனர்.

சென்னை நகரில் கடந்த 2 நாட்களாக காய்கறிகள் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதோடு, விலையும்கடுமையாக உயர்ந்துள்ளது. வெளி மாநிலங்களிலிருந்து வரும் காய்கறிகள் வரத்து குறைந்து விட்டதால்தான்காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகிறார்கள்.

சென்னை நகரின் மொத்த மார்க்கெட்டான கோயம்பேடுக்கு வழக்கமாக தினசரி 300 லாரி காய்கறி லோடு வரும்.ஆனால், இப்போது 125 லோடு மட்டுமே வந்து கொண்டுள்ளது.

தமிழகத்தைப் போலவே ஆந்திரா, கர்நாடகத்திலும் வறட்சி கடுமையாக இருப்பதால், காய்கறி விளைச்சல் இல்லைஎன்றும் இதனால்தான் காய்கறிகள் வரத்து இல்லைஎன்றும் கோயம்பேடு வணிகர்கள் கூறுகிறார்கள்.

சென்னை நகரில் தற்போது கத்திரிக்காய் கிலோ ரூ. 10க்கும், நாட்டுத் தக்காளி ரூ. 17க்கும், பெங்களூர் தக்காளி ரூ.10க்கும் விற்கப்படுகின்றன. பீன்ஸ் விலைதான் அநியாயத்திற்கு ஏறியுள்ளது. கிலோ பீன்ஸ் ரூ. 35க்குவிற்கப்படுகிறது.

காய்கறிகளின் விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், அரிசி விலைகணிசமாக குறைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+