புரட்சிப் பெண் வித்யாவுக்கு பாராட்டு விழா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வரதட்சணை கேட்டு திருமண மண்டபத்திலேயே கொடுமையில் இறங்கிய மாப்பிள்ளையையும் அவரதுவீட்டாரையும் போலீசில் பிடித்துக் கொடுத்த புரட்சிப் பெண் வித்யாவுக்கு சென்னையில் பாராட்டு விழா நடந்தது.

Vidhyaஅகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் இந்த பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதில் கலந்துகொண்ட வித்யா பேசுகையில், இப்போது நான் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறேன்.எனது குடும்பத்தினர் கொடுத்த தைரியத்தில்தான் இந்த செயலை என்னால் செய்ய முடிந்தது. அவர்கள் முழுஆதரவுடன் இருக்கிறார்கள்.

மாப்பிள்ளையை உதறித் தள்ளியதன் மூலம், என்னையும், எனது வாழ்க்கையையும் பாதுகாத்துக்கொண்டுள்ளதாகவே உணர்கிறேன் என்றார் வித்யா.

நிகழ்ச்சியில் பேசிய சங்கக் காப்பாளர் பாப்பா உமாநாத், வித்யாவுக்கு நாங்களே மாப்பிள்ளை பார்த்துக்கொடுக்கத் திட்டமிட்டுள்ளோம். தொடர்ந்து அவருக்குப் பாதுகாப்பாக இருப்போம். அவருக்கு எந்த உதவிதேவைப்பட்டாலும் எங்களது இயக்கம் செய்யும்.

வித்யாவின் திருமணக் கனவை சிதைய விட மாட்டோம். அவருக்குப் பிடித்த வகையில் மாப்பிள்ளை பார்த்துஅவருக்குத் திருமணம் செய்விப்போம். திருமணத்துக்குப் பிறகும் வித்யாவுக்கு நாங்கள் உதவியாக இருப்போம்என்றார் பலத்த கரகோஷத்துக்கு இடையே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+