வனத்துறை வர மறுத்தது: சேற்றில் சிக்கிய குட்டி யானையை மீட்ட கிராமத்தினர்
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மலை கிராமத்தில், சேற்றில் சிக்கிக் கொண்ட குட்டியானையை கிராம மக்களே மீட்டு காட்டுக்குள் அனுப்பினர்.
தேயிலைத் தோட்டங்களுக்குள் புகுந்த அந்த யானைகள் பயிர்களை நாசம் செய்தன. இந் நிலையில்ஒரு குட்டியானை கிராமத்திற்குள் நுழைந்தது. அதை காட்டுக்குள் விரட்ட கிராமத்தினர் முயன்றபோதுசேற்றுக்குள் சிக்கிக் கொண்டது.
சேற்றிலிருந்து வெளியே வர அதனால் முடியவில்லை. இதைப் பார்த்து பரிதாபப்பட்ட கிராமத்தினர்,வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் வனத்துறையினர் யாரும் வரவில்லை.
இதையடுத்து கிராம மக்களே களம் இறங்கி யானையை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு குட்டி யானை சேற்றிலிருந்து மீட்கப்பட்டது. பின்னர் யானைக்குஆகாரமும் கொடுத்த கிராம மக்கள் பின்னர் அதை காட்டுக்குள் விரட்டி விட்டனர்.












Click it and Unblock the Notifications